நூல்கள் அறிமுகம்

பாலமுனை பாறூக் குறும்பாக்கள்

ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார். அடுத்தடுத்து வெளிவந்த அவரது குறுங்காவியங்கள்தாம் அந்த ஈர்ப்புக்குக் காரணம் கொந்தளிப்பு (2010), தோட்டுப்பாய்மூத்தம்மா (2011), எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு (2011) ஆகிய Read more…

By Admin, ago
மரபுக் கவிதை

பகையைத் துடைத்திடு

   எட்டுக் குடி கொண்ட இறைவா எட்டும் மக்கள் குரல் கேட்டு வா விரைவா கொட்டும் வெற்றி முரசு நமக்கே கொஞ்சும் தமிழ் ஒலிக்கும் நமக்கே பகையைக் கண்டு துடைத்திடு பசுமையை எங்கும் விதைத்திடு பகை என்ற நிலையை உதைத்திடு பைந்தமிழே பாராள வகை செய்திடு அடிமைக் கொண்டது தமிழினமா – மண்ணில் குடிமைக் கண்டது Read more…

புதுக் கவிதை

மெய்யும் பொய்யும்

தையும் மார்கழியும் மாறி மாறி, வயதுகள் நெய்யும். தாயும் ‘ஆ’ வும் பருகத் தர, காயும் கனியும். கனியக் கனிய இளமைப் பழங்களை, காலம் கொய்யும். முன் பாதியில் நிலா காயும், பின்னரது தேயும். கவலைக் காயம் காயும், மீண்டும் கனிந்து காயும். முதுமைத் தீயும் பரவும், அது மெய்யை மேயும். சுறுட்டப் படா பாயும் Read more…

புதுக் கவிதை

அம்மா…!

மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி: மங்காத ஒளியாக, அணையாத நெருப்பாக, களையாத மேகமாக, ஓயாத அலையாக, நிற்காத தென்றலாக, மறையாத சூரியனாக, தேயாத பிறையாக, தீராத தாகமாக, நிறையாத பசியாக, வாடாத மலராக, வற்றாத ஆறாக, வடியாத கடலாக, கொட்டாத அருவியாக, குளிராத வசந்தமாக, சுவாசமில்லாத மூச்சாக, நேசமில்லாத மனதாக, உறக்கமில்லாத விழிகளாக , விழிப்பில்லாத விடியல்களாக! Read more…

பகிர்தல்

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

சூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய Read more…

By கௌசி, ago
புதுக் கவிதை

புதுமைப்பெண்

அரசுப்பொதுத் தேர்வில் மாணவிகள் முதலிடம்! ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்! பலகலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்! ஒருதலைக் காதலால் மாணவிக்கு அரிவாள்வெட்டு! விண்வெளியை ஆராய்ந்திட விரைகிறார்கள் பெண்கள்! பாலியல் பலாத்காரத்தால் பலியாகிறார்கள் பெண்கள்! மாதவம்செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்! நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன, வரதட்சனைக் கொடுமையெனும் கூர்வாள்களால்! நிமிர்ந்த நன்நடைகள் முடங்கிப் Read more…

புதுக் கவிதை

புன்னகைக்கிறேன்!

சிலநினைவுகள் எழும்போது குரோதம் கொள்கிறேன், இன்னும்சில நினைவுகளோ என்கண்களை நனைக்கின்றன! மறக்க நினைக்கும் நினைவுகள் என்னைத் தினமும் நினைக்கச் சொல்கின்றன! நினைக்க வேண்டியவைகள் அடிக்கடி தொலைகின்றன! கரைதொட்டுச் செல்லும் அலைகள்போல் என் மனம்தொட்டுச் செல்லும் சிலநினைவுகள், விடைகள் இல்லாத விடுகதைகளாக சில நினைவுகள், முடிவில்லாத தொடர்கதைகளாக பலநினைவுகள், சில நேரங்களில் சிற்றாறுகள்போல், பல நேரங்களில் பாழ்கிணறுகள்போல், Read more…

புதுக் கவிதை

நெற்றி முத்தம்

ஒரு தடவை, இரு தடவை, பல தடவைகள் … கலங்கிக் கலங்கி தெளிந்தே விட்டேன்! வேதாளம் மீண்டும் மீண்டும் ஏறட்டும் … முழு இரவும் என் தூக்கம் திருடட்டும் … உலக உருண்டை இடமின்றி எறியட்டும் … பெண்ணல்ல பேயென்று பெற்றவளே கூறட்டும் … காற்றுக்கு வளைந்ததுவும் நேற்றுக்கள் நனைந்ததுவும் இன்றோடு முடியட்டும் … என்னை Read more…