இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 61

பாடல் – 61

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவ தெய்தாமை முற்காத்தல் – வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும்
சீரேற்ற பேரமைச்சர் கோள்.

(இ-ள்.) ஐஅறிவும் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 61  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 60

பாடல் – 60

பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
விலங்கின் பிறப்தபின் வெருவும் – புலந்தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.

(இ-ள்.) பேஎய் பிறப்பில் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 60  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

புதுக் கவிதை

யாரைத்தான் நம்புவதோ…

உண்மைகளுக்குள்
உண்மைகளைத் தோடும் உலகம்
ஊமையாகிப் போன நேர்மைகள்
தோற்றம் அளிக்கின்றன துரோகங்களாக!

பொய்களுக்கு அளிக்கப்படும்
அலங்கார்த்தில் தான்
எத்தனையே அற்புதங்கள்
மெய்கள் இங்கே முதிர்க்கன்னிகளாக

வாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்
வாசிப்பதற்கு மாத்திரமே
உள்ளங்களில் ஊன்றப்படும்
உவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே!

 » Read more about: யாரைத்தான் நம்புவதோ…  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 59

பாடல் – 59

கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் – இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன போலக் கெடும்.

(இ-ள்.) கிளைஞர்க்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 59  »

சிறுகதை

டாக்டர் அக்கா

நான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.

 » Read more about: டாக்டர் அக்கா  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 58

பாடல் – 58

பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர் உவப்பத்தழுவுதல் – கேளிராய்த்
துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்
மன்னற் கிளையான் தொழில்.

(இ-ள்.) பழமையை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 58  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 57

பாடல் – 57

கொட்டி யளந்தமையாப் பாடலும் தட்டித்துப்
பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் – துச்சிருந்தான்
ஆளுங் கலங்கா முறுதலும் இம்மூன்றும்
கேள்வியுள் இன்னா தன.

(இ-ள்.) கொட்டி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 57  »

இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »