கவிதை

பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும்
…..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்!
பாவாணர் உரைக்கும் பாட்டின்
…..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்!
பாவாணர் எழுச்சிக் காட்டும்
…..பழம்பெருமைக் காக்க வேண்டும்!
பாவாணர் வழிச்செல் நண்பா!

 » Read more about: பாவாணர் வழிச்செல் நண்பா!  »

கவிதை

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !

 » Read more about: கிடைத்த ஐம்பது உரூபா  »

கவிதை

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில்,
ஆணவம் அழிந்து
இன்பம் பிறக்கிறது!

அன்பை உணர்கையில்,
உலகமே சிறுத்து
உள்ளங்கை பந்தாய்!

அன்பை சுவாசிக்கையில்,
மண்ணை நேசித்து
பெண்மையும் சிறக்குதே!

 » Read more about: அன்பினால் …  »

கவிதை

கடைசி நிமிடம்!

என் வாழ்வில்
நடந்ததை நினைக்கையில் – என்
மெய் பொய்யாவென
கிள்ளிப் பார்க்க தோணுது!

நடுநிசியில் மொனித்தது …
புதுவருட வாழ்த்துகளை,
பரிமாறிய மகிழ்வில்,

 » Read more about: கடைசி நிமிடம்!  »

கவிதை

பெண்மையின் முகவரியாய்!

வறுமை வாட்டியதால்,
வெறுமையானதே இவள் வாழ்வு.
இருந்தும், முயன்றவளாய்,
பொறுமையே இவளைப் பார்த்து
பொறாமை கொண்டதே!

தனிமை…
துரத்தி துரத்தி,
வேட்டையாட முயன்ற போதெல்லாம்,

 » Read more about: பெண்மையின் முகவரியாய்!  »

கவிதை

அவள் பாடுவாள்தானே.!

காறித்துப்புவதை
கொத்தி விழுங்கும்
கோழிபோல்தானே
உன்னினம்

பதினைந்து லெச்சம்
என்
பழைய
காதலூத்தை கழுவி
புதியதோர்
இல்லறம் புக

உனக்கப்பாலும்
நான் யாராலாவது
கற்பழிக்கப் பட்டிருந்தாலும்
இன்னும்
சில லெச்சம்
என்னைப் பத்தினியாக்க

நீ
என்னை நேசித்ததாயெண்ணி
உன் காதலூத்தைக்குள்
நான்
வீழ்ந்ததுண்மை
நீயென்னை
கைகழுவிப் போனதுண்மை

முடிந்தால்
வாழ்ந்து பாரென்று
நீ சவாலிட்டதுண்மை

என்றாலும்
காறித்துப்பியதை
கொத்தி விழுங்கும்
கோழிதானே உன்னினம்

 » Read more about: அவள் பாடுவாள்தானே.!  »

கவிதை

அவளென் பா

விருத்தப்பா

தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள்
….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை
சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ
….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்!
தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும்
…..

 » Read more about: அவளென் பா  »

கவிதை

உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை
— உன்னதமாய்த் தாய்காட்டி
நிலாச்சோறு ஊட்டுகின்ற
— நிம்மதிதான் வேண்டுமென்று
பலாசுவையாய் அமுதூட்டப்
— பக்குவமாய் வாய்த்திறக்க
நிலாமகளை நினைந்துகொண்டு

 » Read more about: உலாவரும் நிலா  »

மரபுக் கவிதை

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .

திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .

 » Read more about: பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி  »

கவிதை

காத்திருக்கின்றேன்

முன்னம் …
எப்போதும் போல
இல்லா வண்ணம்
நேசிக்கின்றேன் உன்னை!

என் காதலை
உன்னிடம் சொல்வதாய் இல்லை!
என்றேனும் உணர்ந்து,
நீயாக எனை தேடும் வேளையில்
உனக்காக வழங்க
மொத்தமாக சேர்த்து வைத்து
உனக்கான முத்தங்களை!

 » Read more about: காத்திருக்கின்றேன்  »