மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ இசை நுணுக்கம் ஏதுமிலை எடுத்துரைக்க இயைபுமொழி யிலக்கணங்கள் பொருந்தல் இல்லை விசையாகப் பாய்கின்ற வேக மில்லை வீறுமொழி அதிர்முழக்கம் அதிலே யில்லை பிசைகின்ற உயிர்க்காற்று ஊற்றி வைத்துப் பிழையறியாச் சிறுபாடல் இசைக்கின் றேன்யான் திசையெங்கும்‌ பரவுகிற இசைக்கோ வைக்குள் சிறியேனின் இளங்குரலைச் செவியேற் பாயோ உணர்வென்னும் தேனமிழ்தம் நிரப்பு கின்றேன் உயிர்உருகும் மெல்லிசையே இசைக்கின் றேன்யான் தணியாத பெருங்காதல் ததும்பும் என்றன் சாமீஉன் திருவடியில் உளம்கி டக்கும் அணியாத பூவாய்என் காதல் மாலை அடிமலர்க்கே சூட்டுகிறேன் அரசே உன்றன் மணிமார்பில் ஏற்பாயோ என்றி ருந்தேன் வந்ததென்னே என்குடிசை வாசல் தேடி என்இசையோ நீவிரும்பும் மலரா யிற்று எளியேனின் வாசலிலே நகைசெய் கின்றாய் என்அன்பே என்குடிசை வாசல் நின்றாய் யானறியேன் எங்கெங்கோ தேடு கின்றேன் என்அன்பே என்அன்பே என்பே னோநான் இளநகைப்பில் உயிர்சுழன்று வீழ்வே னோநான் என்முன்னே யிருப்பதனை அறிகி லேனே என்வாசல் அமுதத்தை சிந்து கின்றாய் எவ்வகையும் தகுதியிலா இரவ லன்யான் என்பொருட்டோ என்அரசே இங்கு வந்தாய் செவ்வியநின் புன்முறுவல் என்னை நோக்கிச் செய்கின்றாய் இம்மாயம் அறிவே னோநான் தெய்வதமே இச்சிறிய மலரை ஏற்றுச் செவ்வியபுன் னகைசெய்தே செல்லு கின்றாய் எவ்விதமும் நின்வருகை அறிந்தி ‌டாமல் நெகிழ்ந்தழுது‌ நின்றதனை என்ன சொல்வேன் தேம்புகிற என்செவியில் பண்ணி சைக்கும் திடீரெனஎன் திசையெல்லாம் தென்றல் வீசும் பூம்பொழில்கள் அசைவெல்லாம் அய்யோ நின்றன் புல்லாங்கு ழலாகக் கேட்கும் என்னே காம்புதிரும் மலரெல்லாம் களிவண் டார்க்கும் கண்ணீரோ வரம்பின்றிப் பொழியும் சாமி தீம்புனலே நீவந்து செய்த மாயம் இவையென்று சிறியேன்யான் தெரிகி லேனே கண்சுழன்று மெய்யுருகிக் கரைந்தே யென்றன் காதலெலாம் இசையாகிக் கனிந்தேன் அய்ய விண்மயங்கும் ஒலிகளிலே எனது பாடல் வெற்றுவெளிக் கலந்திடுமோ உன்பா தத்தில் பண்மயங்கிக் குழைந்திடுமோ மறைந்து போமோ பரபரப்பில் அருகிருக்கும் உனை மறந்தேன் அண்மையிலே உனையறியேன் அழுது நின்றேன் அரசே என் அய்யனே சிரித்துப்போனாய் கண்உதிர்க்கும் கண்ணீரே மலர் களாகக்‌ கைகுவித்தேன் எனையேற்றுக் கொள்வாய் நீயே! (மேலும்…)

கவிதை

தம்பி… 7

தொடர் எண் 7.

தலைப்பு : இன்சொல்.

ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே
நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய்
தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால்
வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே.

 » Read more about: தம்பி… 7  »

கவிதை

தம்பி… 6

தொடர் எண் 6.

தலைப்பு : வீரம்

வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய்
ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள்
ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு
வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு.

 » Read more about: தம்பி… 6  »

கவிதை

தம்பி… 5

தொடர் எண் 5.

தலைப்பு : நட்பு.

கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே
உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே
பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும்
தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய்.

 » Read more about: தம்பி… 5  »

கவிதை

தம்பி… 4

தொடர் எண் 4.

தலைப்பு : ஏமாறாதே.

மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும்
கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை
ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள்
மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே.

 » Read more about: தம்பி… 4  »

கவிதை

அனுபவம்

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம் வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை... ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்... இப்படி எத்தனை காலம்தான் ஏமாறப் போகின்றோமோ... சிந்தனை செய்யும் சக்தி இருந்தும் அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்.. கொஞ்சம் அதிகம்தான்...

கவிதை

தம்பி… 3

தொடர் எண் 3

தலைப்பு : தம்பி நலமா ?

உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும்
என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே
நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா
ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே.

 » Read more about: தம்பி… 3  »

கவிதை

தம்பி… 2

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான் சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.