கவிதை

சொக்குப்பொடி

சுண்ணப்பொடி சுகந்தப்பொடி
சுந்தரியின் எண்ணப்படி.
வண்ணப்பொடி வசந்தப்பொடி
வந்திருக்கும் சொர்ணப்பொடி.

கோலப்பொடி கொஞ்சும்படி
குலமகளை விஞ்சும்பொடி,
சாயப்பொடி சாந்துப்பொடி
சரியவைக்கும் சந்தனப்பொடி.

மஞ்சள்பொடி மகிழும்படி
மங்கைப்பூச மருதாணிப்பொடி,

 » Read more about: சொக்குப்பொடி  »

கவிதை

பரிதவிக்கும் பணியாரம்

சுட்டுவைத்தேன் பணியாரம்
சூடாறும் முன்னே
தட்டினிலே பரப்பிவைத்தேன்
தானாக விற்குமென்று .
மொத்தமாய் வித்திட்டு
முதலீடு செய்யலாமென்று
சப்தமிட்டுக் கூவிப்பார்த்தேன்,
சாப்பிட யாரும் வரவில்லை .

 » Read more about: பரிதவிக்கும் பணியாரம்  »

கவிதை

பாதுஷா

பாதாமில் செய்திட்ட பாதுஷாவே
நான்தான் இனியுந்தன் நாதர்ஷாவே !
முந்திரியில் செய்தகுளோப் ஜாமூனே
முறுவலிலே நீதருவாய்முன் ஜாமீனே !

ஜீராவில் மிதக்கின்ற ஜாங்கிரியே
எனக்காக நீயென்றும் ஏங்குறியே !

 » Read more about: பாதுஷா  »

கவிதை

பெண் தொழிலாளி

கூந்தலினைப் பின்னிப்போட்டவள்
கூடதடுக்கையையும் பின்னுறாள்.
ஆசையாகப் பின்னும் எதிலுமே
ஆனந்தம் பொங்கி வழியுமே!

உழைத்துக் கருத்துப்போனவள்,
உள்ளம் வெளுத்துப்போனவள்.
கள்ளமில்லா நெஞ்சத்தில் ;நாளும்
கருணைமழைப் பொழிபவள்.

 » Read more about: பெண் தொழிலாளி  »

புதுக் கவிதை

தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்

தென்றலினைத் தூதுவிட்டு
தேன்தமிழை மோதவிட்ட
அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன்
அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு

செவ்விதழைப் பூக்கவைத்து
தேன்சுவையைத் தேக்கிவைத்து
நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு –

 » Read more about: தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்  »

கவிதை

நான் ஆட்சிக்கு வந்தால் …

புட்டிக்குள் இருக்கும் மதுவைப் பருகிடும் செயலைக் கொய்வேன். கடவுள் பெயரால் நடக்கும் கொடுமைகள் பலவும் தடுப்பேன். மடமை போற்றும் துறவிகள் மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் . இலஞ்சம் ஊழல் இல்லாத இலட்சிய ஆட்சிப் புரிவேன்.

கவிதை

மோகத்தை அழைக்கவா

தோகைமயில் நடந்தால் போதும் தொப்புள்குழி தெரியவா வேண்டும் ? வாகைப்பூ மலர்ந்தால் போதும் வயிறுமுழுதும் தெரியவா வேண்டும் ?

மரபுக் கவிதை

அழகு மலர்

விழியாலே கதைசொல்லும்
வெள்ளிநிலவே! உந்தன்
மொழிசொல்லும் கவிதையுமே
மெளனம்தானோ? வீணாய்ப்
பழிபோடும் எண்ணத்தின்
பார்வையிது, விழியில்
வழிகின்ற கவர்ச்சியிலே
வழிமாறும் மனமும்தான்.

கன்னத்தில் கைவைத்தக்
காரிகையே!

 » Read more about: அழகு மலர்  »

புதுக் கவிதை

இரட்டை மலர்

மொட்டிரண்டுப் பூத்திருக்கு
முறுவலையே காட்டிருக்கு,
கட்டிவெல்லக் கன்னமதில்
கனிமுத்தம் நாட்டிருக்கு.

சின்னஞ்சிறு பூக்களிங்கே
சித்திரமாய்ச் சிரித்திருக்கு,
வண்ணமலர்க் கோலமிட்டு
வானமதைப் பறித்திருக்கு.

பட்டுப்போன்ற மென்மையிலே
பளபளப்பாய்ப் பார்த்திருக்கு,

 » Read more about: இரட்டை மலர்  »

மரபுக் கவிதை

சொல்வாய் நீயே!

மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன்
மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே!
கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன்
கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே!

அதிகாலைத் துயிலெழுந்த அழகியே –

 » Read more about: சொல்வாய் நீயே!  »