மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2019

உலகமெங்கும் பெண்ணியம் பேசும் நேரத்தில், மென்மையாக நீங்கள் பெண்ணியத்தை ஒத்துக் கொள்ளாததன் காரணமென்ன..

சுவாரசியமான கேள்வி .. முதலில் “மென்மையாக” எனும் உங்கள் குறிப்பீடு அழகாக இருப்பதுடன் என் மீதான உங்கள் புரிதலைப் புரிய வைக்கிறது.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2019  »

மரபுக் கவிதை

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !

 » Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே…  »

புதுக் கவிதை

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

நீலவண்ண தாவணியில்
நெஞ்சையள்ளும் பேரழகில்
கருஞ்சாந்து பொட்டிட்டு
கண்பறிக்கும் அழகாலே

செந்நிர இதழ்மீது
கருந்துளி மச்சத்தில்
காளையரை மயக்குகின்ற
கச்சிதமான அழகாலே

செவ்விதழ் இதழிணைத்து
தித்திக்கும் மொழிப்பேசி
தேன்சொட்டும் சுவையினில்
தேவதையின் அழகாலே

வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
என்னருகில் வந்தாளே
வான்மகள் நிலவாக
ஔிர்ந்தேதான் நின்றாளே

உச்சரிக்க வார்த்தையின்றி
உதட்டினை கட்டிப்போட்டு
ஊர்மெச்சும் அழகோட
உருவாகி வந்தாளே

பேரழகு யாதென்று
அறியாதோர் அறிந்திடத்தான்
பிரம்மனோட பிறப்பையும்
எஞ்சியே எழில்கொண்டாளே

தோகைமயில் அழகினையும்
மிஞ்சியே வந்தாளே
பஞ்சவர்ண கிளியாக
பிரபஞ்சத்தில் மலர்ந்தாளே

எழில்நிறைப் பேரழகே
என்மனம்நிறை ஓரழகே
உனக்காக நானானேன்
எனக்காக நீயாவாய் ?

 » Read more about: வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்  »

கட்டுரை

யாளி – 4

யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும்,  » Read more about: யாளி – 4  »

மின்னிதழ்

யாளி – 3

புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆன்மீகம்:~ ~~~~~~~~ ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்..!  » Read more about: யாளி – 3  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2019  »

By Admin, ago
கட்டுரை

யாளி – 2

யாளியை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இது, அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும். யாழிகளின் வகைகள்:- ••••••••••••••••••••••••••••••••• சிம்ம யாளி மகர யாளி கஜ யாளி ஞமலியாளி பெரு யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்..!  » Read more about: யாளி – 2  »

By Admin, ago
கட்டுரை

யாளி – 1

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

 » Read more about: யாளி – 1  »

கட்டுரை

காதல்

பூவைவிட காமம் மெல்லியது.
அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு!

காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன.

 » Read more about: காதல்  »

By கௌசி, ago