கவிதை

மனிதனை நினைத்தால்

பிறர் குறைகளைச் சுட்டிக் காட்டுவதில் வேறு எந்த உயிர்களும் அவனை வென்றதாக வரலாறு கிடையாது என்பதால்! அவன் தன் பிழைகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை!

கவிதை

தாய்க்கொரு மடல்

எஜமானின் வீட்டு கனவான்களுக்கு சமைத்துத்தான் கொடுக்கின்றேன் வயிற்றுப் பசியாற்றவும் உடற் பசியாற்றவும் என்னைத்தான் நாடுகின்றான் ஒருவன் மாறி ஒருவன்! செத்துப்போன உடலுக்குள்ளே ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன் கலங்கிவிடாதே தாயே...!

கவிதை

மனதில் ஒரு கீறல்!

நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில் நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது; நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில் ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல் ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில் வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே ...

கவிதை

மனசாட்சி

மனசாட்சியை இழப்பதும் இல்லாமல் செய்வதும் மானிலத்தை அவமதிப்பதாகும்... மனித புலத்திற்குள், வனவிலங்குகள் வாசம் செய்வதாக! மனசாட்சியைக் கொன்று வாழ்தலென்பது, காலமுனை சிரச்சேதம் செய்யும் தருணமாகிவிடும்!

கவிதை

கவிதை துளிகள்

எழுதி முடித்த கவிதைகளின் முதல் இரசிகனாய் என் பேனா கசங்கியிருந்த காகிதம் பட்டமாகியது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காணாமல் போன குழந்தை கிடைத்து விடுகிறது சுவரொட்டிகளில்

புதுக் கவிதை

புதுமைப் பெண்ணிவளா?

அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !

தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி,

 » Read more about: புதுமைப் பெண்ணிவளா?  »

கவிதை

தரணி வாழ்த்திட வா!

நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு செம்மொழி நம்மொழி எனக்கூறு செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு முது மொழி நம் மொழி மூல மொழி பிறந்தன இதன்வழி பல மொழி இதற்கிணை ஏது ஒரு மொழி செகத்திற் அறிந்த தமிழ் மொழி

கவிதை

மூன்றாம் காதல்

பத்தாம் வகுப்பு படிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தவளுக்காய் எழுதிய காதல் கடிதத்தை அவன் அப்பாவை ? படிக்க வைத்துப் பார்த்த முதல் காதல் !

கவிதை

அப்பாவின் கையெழுத்து

வண்டுகடி பூ நிற மதிப்பெண் அட்டை நீட்டி " கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க சாரு " அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால் மடமடத்து நிற்கும் பாவாடை கசக்கி நிற்பேன்.