புதுக் கவிதை

மது குடிக்கும் உயிர்

மதுவுடைய பிடியினிலே
மயங்குகிற அடிமையே!
எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய்;

மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்திலே நீயிருப்பாய்;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை;

இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும்;

 » Read more about: மது குடிக்கும் உயிர்  »

புதுக் கவிதை

பிராணவாயு நீ !

சுவாசிக்கும் காற்றில்
கரியமிலவாயு நான்,
பிராணவாயு நீ!

பருகும் நீரில்
ஹைட்ரஜன் நான்,
ஆக்சிஜன் நீ!

எரியும் விளக்கில்
வெப்பம் நான்,

 » Read more about: பிராணவாயு நீ !  »

புதுக் கவிதை

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி !
இயற்கையின் நிறத்தினை
இயல்பானத் தரத்தினை
இருளின் வடிவாக
இருக்கப் பெற்றவளே !

கருப்பை இருப்பைக்
கவர்ந்து ஈர்த்து
கறுப்பை நிறமாய்க்
காலத்தில் பெற்றவளே !

 » Read more about: கறுப்பு நிறத்தழகி !  »

மரபுக் கவிதை

ஆடைகட்டிவந்த அல்லிமலர்

இரவிவர்மா ஓவியமா
இராமன்கதைக் காவியமோ ?
வானவர்க்கும் கிடைக்காத
வந்திருக்கும் திரவியமோ ?

மின்னலுக்கு ஆடைகட்டி
மேதினியில் உதித்ததுவோ ?
கன்னலுக்குத் தேன்பாய்ச்சி
காலிங்குப் பதித்ததுவோ ?

 » Read more about: ஆடைகட்டிவந்த அல்லிமலர்  »

மரபுக் கவிதை

சொர்க்கத்தைத் தந்தாயடா !

சாமத்தில் எழுந்து
காமத்தில் நுழைந்து
மோகத்தை விதைத்தாயடா – இரு
போகத்தை அறுத்தாயடா.

வேகத்தில் மிதந்து
சோகத்தை மறந்து
தேகத்தை வதைத்தாயடா – என்
தூக்கத்தைக் கெடுத்தாயடா.

 » Read more about: சொர்க்கத்தைத் தந்தாயடா !  »

கவிதை

தண்ணிலவும் தமிழ்நெஞ்சமும்

அல்லிமலர் போலிருக்கும்
அழகானப் பெண்ணருகில்
கொல்லிப்பலா கொஞ்சுகின்ற
கவிஞரிவர் தமிழ்நெஞ்சம்,
அள்ளிக்கொண் டுசென்றிடவே
ஆவலுடன் நிற்கின்றார்,
பள்ளியறைக் காத்திருக்க
பலகனவுப் பூத்திருக்க.

வெள்ளிநிலவு இங்குவந்து
விளையாட்டில் தனைமறந்து
பில்லியாட்ஸ் ஆடுகின்ற
பேரழகை என்னென்பேன்,

 » Read more about: தண்ணிலவும் தமிழ்நெஞ்சமும்  »

மரபுக் கவிதை

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .

திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .

 » Read more about: பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி  »

கவிதை

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா!

விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா!

உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா!

எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா !

உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா!

 » Read more about: ​உச்சிக் குளிருதடா!  »

கவிதை

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன்
வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே !
பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன்
பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே !

அலங்கார நடைபோடும் தேவதையே –

 » Read more about: அம்மனைத் தேடும் அழகுரதம்  »

கவிதை

கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!

வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து
வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும்,
துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு
துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும்,
படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும்
பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும்,

 » Read more about: கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!  »