கவிதை

உயர்வென்ன தாழ்வென்ன!

(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா)

பாடுபடும் கைகள் பகலவன் போலொளி
கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம்
ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய்
ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்!

 » Read more about: உயர்வென்ன தாழ்வென்ன!  »

கவிதை

க(பெ)ற்ற அனுபவம்!

பாவகை20160425_1450: வஞ்சித் தாழிசை

கூடம் அதிரும்
சாடல் கேட்டு
வேடம் கலைந்த
பாடம் பெ(க)ற்றேன்!

தேடி வந்து
சாடித் தீர்த்தக்
கேடிச் சொல்லில்
கோடி பெ(க)ற்றேன்!

 » Read more about: க(பெ)ற்ற அனுபவம்!  »

கவிதை

குறளோடு உறவாடு!

வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! - குறள் வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்! தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! - தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!

கவிதை

உலகம் மாறிப் போச்சு!

குளமுமே வத்திப் போச்சு
குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப
நிலமுமே காஞ்சு போச்சு
நிலத்தடி நீரு மில்ல!

விளச்சலும் குறைஞ்சு போச்சு
விளைநிலம் வீடா ஆச்சு –

 » Read more about: உலகம் மாறிப் போச்சு!  »

கவிதை

பேச்சில் இனிமை வேண்டும் !

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
…… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
…… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
…… 

 » Read more about: பேச்சில் இனிமை வேண்டும் !  »

கவிதை

புரட்சி வெடிக்கட்டும்!

உழவுத் தொழிலும் செழிக்கட்டும் - நம் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்! வளமாய் நாட்டை மாற்றிடவே - ஒரு வண்ணத் தமிழன் ஆளட்டும்! விடையும் காண விரையட்டும் - நல் வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்! குடியால் வீழ்ந்து கிடப்போரும் - தமிழ்க் குடியைக் காக்க விழிக்கட்டும்!

கவிதை

கம்பன் புகழைப் பாடு மனமே !

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! - தேயவழி தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்! பீடும் பிணையும் பெருத்து! கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! - அற்புதமாய் அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்! வந்தோதி ஓங்குமே வாழ்வு!

கவிதை

தமிழை என்னுயிர் என்பேன்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கிய குளிரிள நீரும் இனிய என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்.