மரபுக் கவிதை

வெடிதனை வெடிக்க வேண்டாம்!

diwali_tn1வெடிதனை வெடிக்க வேண்டாம் – வான்
வெளிதனைக் கெடுக்க வேண்டாம்!
செடிகொடி மரங்கள் தன்னில் – வாழும்
சிட்டினை அழிக்க வேண்டாம்!

விலங்குகள் பறவை எல்லாம் –

 » Read more about: வெடிதனை வெடிக்க வேண்டாம்!  »

கவிதை

உண்டு!

பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு !
பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு !
குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு !
கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு !
பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு !

 » Read more about: உண்டு!  »

கவிதை

வருவாய் நிலவே!

நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என்
நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே!
நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என்
நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே!

தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே –

 » Read more about: வருவாய் நிலவே!  »

கவிதை

இராவணன் !!

இறை வணக்கம் !

தங்கத் தமிழை அளித்திட்ட
தமிழின் தலைவா முதல்வணக்கம் !
எங்கும் மணந்து கமழ்கின்ற
எழிலே தமிழே என்வணக்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
அவைக்கும் என்றன் நல்வணக்கம் !

 » Read more about: இராவணன் !!  »

கவிதை

கனவு நாயகன் அப்துல்கலாம்!

தூக்கத்தில் வருவதல்ல கனவு – உன்னைத்
தூங்காமல் செய்வதுதான் கனவாம் – என்றே
ஊக்கத்தை நமக்கெல்லாம் தந்தவர் – இந்த
உலகறியத் தலைமகனாய் வந்தவர்!

இளைஞர்க ளின்எழுச்சி நாயகர் –

 » Read more about: கனவு நாயகன் அப்துல்கலாம்!  »

கவிதை

இழந்து விட்ட கணப்பொழுது

வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய்
—-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து
தூய்மையான புகழுடனே உலகம் போற்ற
—-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச்
சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய்
—-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம்
தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித்
—-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே !

 » Read more about: இழந்து விட்ட கணப்பொழுது  »

கவிதை

பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும்
…..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்!
பாவாணர் உரைக்கும் பாட்டின்
…..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்!
பாவாணர் எழுச்சிக் காட்டும்
…..பழம்பெருமைக் காக்க வேண்டும்!
பாவாணர் வழிச்செல் நண்பா!

 » Read more about: பாவாணர் வழிச்செல் நண்பா!  »

கவிதை

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !

 » Read more about: கிடைத்த ஐம்பது உரூபா  »

கவிதை

அவளென் பா

விருத்தப்பா

தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள்
….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை
சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ
….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்!
தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும்
…..

 » Read more about: அவளென் பா  »

கவிதை

உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை
— உன்னதமாய்த் தாய்காட்டி
நிலாச்சோறு ஊட்டுகின்ற
— நிம்மதிதான் வேண்டுமென்று
பலாசுவையாய் அமுதூட்டப்
— பக்குவமாய் வாய்த்திறக்க
நிலாமகளை நினைந்துகொண்டு

 » Read more about: உலாவரும் நிலா  »