தியானயோகம்

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. நிகழ்வு தொடங்குமுன்னே வருகிறார். ஒல்லியான தேகம். சுறுசுறுப்பான நடை. வெண்ணிற மீசை. பளிச்சென்ற கண்கள். கண்டவுடனே எனக்குப் பெருமகிழ்வு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடல்; சார் சார் என.

ஐயா என்று பழகிப் போன எனக்கு அது கொஞ்சம் சிரமமாகத் தெரிந்தாலும் வித்தியாசமாகத் தெரியவில்லை. அவர் பாடும் திறன் கொண்டவர் என்பது அவர் வெளிப்படுத்திய கீழடி குறித்த கவிதை காட்டியது. அவர் தஞ்சைத் தமிழ் மன்றத்தில் தொடர்ந்து வெண்பாக்கள் பதிவிடுபவர். ஒரு சில கொள்கை வேறுபாடுகள் இருப்பினும் தமிழ் எங்களை இணைத்தது. ஆம் அவர்தான் பாவலர் சீனி பழனி அவர்கள்.

அன்று அவர் என்னிடம் அவரது நூல் ஒன்றைப் பரிசளித்தார். அவரது நூல் ஏதும் படித்தவன் இல்லை என்றாலும் இந்த நூல் என்னைப் படிக்கத் தூண்டியது. பெரியாரின் கொள்கையில் ஊறித்திளைத்தவரான ஐயாவின் நூலில் கடவுள் மறுப்புக் கொள்கை இருக்கும் எனத்தெரிந்தாலும் அதனை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன். பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தைச் சாடும் திருக்குறள் குறித்த ஆய்வுக் கட்டுரையாக இந்நூல் அமைந்திருந்தது. ஆறாவதுஅத்தியாயத்தின் ஒவ்வொரு சுலோகத்தையும் சொல்லி அதன் விளக்கம் மற்றும் அதனை திருக்குறள் சாடிய விதத்தைத் தனக்கே உரிய எளிய பாணியில் கொடுத்துள்ளார். வரலாற்றுச் சான்றுகள் ஆங்காங்கே எடுத்தாளப் பட்டுள்ளன.

மகாபாரதம் இராமாயணக் கதைகளைப் பற்றி எனக்கொரு கருத்துண்டு. அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அரசர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்களைப் பற்றிய செய்திகள் மக்களுக்கு நாடகம் பாடல்கள் வழியாக சொல்லியிருக்க வேண்டும். பிறகு கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டு கடவுளின் அவதாரங்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். இராமர் வடநாட்டிலிருந்து தமிழர்களை விரட்டிய மன்னனாக இருந்திருக்க வேண்டும்; கிருஷ்ணர் உள்ள மகாபாரதப் போரும் உண்மையில் நடந்திருக்கலாம் என்பதற்கு சங்ககாலமன்னரான பெருஞ்சோற்று உதியனும் உறுதிப் படுத்தப்படுகின்றது. எனது நீண்ட கால இந்த ஐயம் இவரது நூலைப் படிக்கும் போது தெளிவானது.

கீதை மகாபாரதத்தின் இடைச்செருகல் என்றும் கீதையின் பெரும்பாலான கருத்துகள் பிராமணீயத்தை பறைச்சாற்றும் விதமாக உள்ளது என்றும் தெளிவாக்குகிறார். பார்ப்பனர்கள் என்பவர்கள் எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவர் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக கீதை உள்ளது என்று கூறும் இவரது கருத்தை பிராமணர்களும் ஏற்றுக்கொள்வர் என்பது அவர்கள் இன்று செய்யும் பலதரப்பட்ட பணிகளும் காட்டுகின்றன. இன்று பார்ப்பனர்கள் எவரும் கீதை சொல்லும் பணிகளைச் செய்வதில்லை. அவர்களும் மற்றவர்களைப் போலவே அன்றாடப் பணிகளைத்தான் செய்துவருகிறார்கள். உலகின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள் என்பது உண்மை.

இவரது நூலில் ஆறாவது அத்தியாயத்தின் 47 சுலோகங்களையும் ஒன்று விடாமல் அலசி ஆய்ந்து உள்ளார். சமஸ்கிருதம் நன்கு அறிந்த வரும் சமஸ்கிருதப் பாடல்களைப் பாடவல்லவரான இவரது ஆய்வு பெரும்பாலும் ஏற்புடையதே. பார்ப்பணர்களைவிட அவர் இந்துமதக் குருமார்களையும் வைணவக் குருமார்களையும் ஆதிசங்கரர் போன்ற சங்கராச்சாரியார்களையும் தான் கடுமையாகச் சாடியுள்ளார். திதி திவசம் கொடுத்தலைச் சாடும் இவர் அப்பாவி மக்கள் இதுபோன்ற சடங்குகளால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இராசாசி அவர்களின் குலக்கல்வித்திட்டத்தைச் சாடும் இவர் காமராசரின் கல்வித்திட்டத்தைப் பாராட்டத் தவறவில்லை.

ஒவ்வொரு சுலோனத்தையும் திருவள்ளுவர் மற்றும் திருமூலரின் படைப்புகளுடனும் புத்தர் சைவ வைணவ சமயங்களுடனும் ஒப்பிட்டு எழுதியுள்ள தன்மை பாராட்டத்தக்கது.

தியானம் யோகம் போன்றவற்றைத் தேவையற்றன என்று குறிப்பிடும் இவர் அவற்றை முடநீக்கியல் மனநலஆய்வு போன்றவற்றுடன் தொடர்பு படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. இவரது நூல் ஒரு தெளிவை ஏற்படுத்தும். வள்ளுவர் மேல் உள்ள பற்றை அதிகரிக்கும். கடவுள் மறுப்பு கொள்கையாளருக்கு மேடையில் பேச நன்றாக உதவும். .

புத்தக ஆசிரியர் : பாவலர் சீனி பழனி எம்.ஏ அவர்கள்

வெளியீடு :

எஸ்.பழனி,
25/30 குமரன் தெரு, லட்சுமி புரம், கொளத்தூர் அஞ்சல், சென்னை 600 090

போன் 9940693986.

விலை ரூ 120/-


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »