எனது சிறுவயது
தீபாவளி எப்படி!!!

என்று வரும் என்றே எனை
ஏங்க வைக்கும்

காலை எழுந்தவுடன்
நாட்காட்டி பார்த்து பார்த்து
தாள்கள் பழசாய்ப்போகும்

என்ன வண்ண உடை
எங்கே எடுப்பது கவலை
வேறு வந்து ஆட்டும்

யாருமே அணியாத
புது வகைத்துணியில்
நான் மட்டுமே அழகியாக
தோன்றவே விருப்பம் கொள்ளும்

தீபாவளிக்கு ஐந்துமுறையேனும்
கடைக்குச்செல்லவேண்டும்

புதிதாக என்ன மாதிரி உடை
கண்கள் வட்டமிடும்
உனக்கு மட்டுமே இத்தனை
நேரம் எடுத்தால் மற்றவர்களுக்கு??
விரைந்து முடி
சிடுசிடுப்பார் அம்மா..

இறுதியில் ஒன்றை எடுத்து விட்டு
வீடு வந்தாலோ
அடடா அதே அழகாய் இருந்ததே
விட்டு விட்டோமே..
அம்மா எனக்கிதுப் பிடிக்கவில்லை
வா மாற்றிவிடலாம்
வேறு என்பேன்.

திரும்பவும் சென்று முதலில்
பார்த்ததே சரி என்று…
இப்படித்தான்..
ஒவ்வொரு வருடமும்
தொடர்கதையாய்…
..
திரும்பவும் நீல
வண்ணமா வேறு கண்களுக்குத்
தென்படாதா
உனக்கு என்ன? திட்டுவார்கள்…
பிறகு….
அதே வண்ண நகப்பூச்சு
ஏனம்மா அழகான விரல்கள்
ரோசாப்பூ வண்ண நகங்கள்
உனக்கு பின் எதற்காய்
இந்த நகப்பூச்சு
நன்றாகவா உள்ளது
கூறுவார் அம்மா
ம்கூம் முடியாது…
சரி சரி.ஏதோ செய்
என்று நகர்ந்து விட …
எனக்குப்பிடித்த
வளையல் தலைக்கணி
என்று உடைக்குப்பொருத்தமாய்
வாங்கிய பின் பார்த்தால்
கொண்டு சென்ற
காசு அனைத்தும் செலவாகிருக்கும்…

இரவு…
மறுநாளை நினைத்து நினைத்து
உறங்கி விட
விடிய விடிய பலகாரம்
செய்யும் அம்மா தனியளாய்..
உறங்கிய எங்களை
விடியற்காலை எழுப்பி விடுமே
அடுத்த வீட்டு வெடிச்சத்தம்

அம்மா அம்மா கொதிநீரெங்கே
பாடுபடுத்தி
தலைக்கு எண்ணெய் வைத்து
சிகைக்காய் பொடி
தேய்த்து நான் முதல் நீ முதல்
என்று போட்டி போட்டு
குளித்து புதுத்துணி உடுத்தி
வாங்கி வந்த அலங்காரப் பொருட்கள் அழகுபடுத்தி
….
அடடா உண்மையில் எந்த தேசத்து மகாராணி
என்றே பார்த்தவர் கண்படும்
கொள்ளையழகாய்

எதிர்வீட்டு அடுத்த வீட்டுப்பெண்களுடன்
எவர் உடை அழகு என்றால்
முதலிடம் தென்றல் பிடிப்பாளே
ஒவ்வொரு வருடமும்…


1 Comment

தென்றல் கவி · அக்டோபர் 27, 2019 at 8 h 44 min

தீபாவளி அன்றே எனது கவிதையை இணையத்தில் இடம்பெற செய்தமைக்கு நன்றி!
தீபாவளி வாழ்த்துகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்