• விழி கொண்டு
  மலரும் காதல்
  மொழி கொண்டு
  நகரும் கவிதை.

 • மறந்திடாமல்
  சொல்ல நினைத்த
  கவிதையொன்று
  தொலைந்து போனது.

 • இமைகளின்
  அனுமதியின்றி
  உறக்கம் தழுவுவதில்லை
  விழிகளை.

 • கிளையைப் பிரிந்த சருகு
  சில கணங்கள்
  நீந்திப் பழகுகிறது
  காற்றில்.

 • வீட்டில்
  வளர்ப்பு நாய்
  எச்சிலிலையில் ஏதுமில்லை
  பாவம் தெருநாய்.

 • நிறைவுற்றது பயணம்
  வழக்கம் போல்
  வீதியில் விட்டுவிட்டாய்
  பிரியமின்றி தவிக்கிறேன்.

 • இருட்டிலிருக்கிறேன்
  உற்றுப்பார்
  நிழலாய் தெரியலாம்
  நான்.

 • சுடறேற்ற
  பயம் போயிருக்கும்.
  அறையினுள் தனியாய்
  தவிக்கும் இருட்டுக்கு.

 • சிறிது நேரத்தில்
  அவளின் வருகை.
  அப்போது நான் அவளாக
  அவள் நானாவேன்.

 • நிரம்பி விட்டாய்
  இன்னும் ஊற்றாதே!
  வழிய வழிய
  மண் தின்னும் உன்னை.

 • உன் நினைவுகளைத் தவிர
  உன்னுடையதென்று
  ஏதுமில்லை
  என்னிடத்தில்…!

 • அகலில்
  நெய்யாய் இருக்கிறேன்
  திரியாக வா
  காதல் சுடராகி ஒளிர்வோம்.

 • கெட்டும்
  நெத்தும்
  வேண்டாம்
  உற்றார் வீடு.

 • நீ ஏறுகிறாய்
  நான் இறங்குகிறேன்.
  இருவரும் சந்திக்குமிடம்
  சமதளம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

இயலாமையின் ஓளி

இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…

நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…

வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…

 » Read more about: இயலாமையின் ஓளி  »

புதுக் கவிதை

வேண்டும் சுதந்திரம்

மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி
மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்!
சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு
சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்!

அணைக்கட்டுப் பிரச்சினையின்றி
ஆதரவாக வேண்டும் சுதந்திரம்!
வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம்
வென்றிட வேண்டும் சுதந்திரம்!

 » Read more about: வேண்டும் சுதந்திரம்  »

புதுக் கவிதை

மனப் பெயர்வு

வாடகை வீட்டில்
வாழ்க்கையைக் கடத்தியது
போதுமென
அடுக்ககத்தின்
புது மனையில் நுழையும்
ஆயத்தப் பணியில்
அனைத்தும் எடுத்து வைத்தாயிற்று

ஏதேனும்
மறந்துவிட்டோமா என
ஒவ்வோர் இடமாய்
கண்களால் துழாவும் வேளை

வாங்கியதில் இருந்து
பூக்காமல்
ஏங்கவைத்த
அந்தச் சாமந்திப் பூச்செடி
அன்றுதான்
மொட்டு விட்டிருந்தது

 » Read more about: மனப் பெயர்வு  »