முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

உருண்டிடும் சக்கரம் சுழல
உருவிலே சிறிய தொன்று,
உரமதாய் உன்னைத் தாங்க
ஊரெல்லாம் சுற்றி வருவீரே!

பெற்றவர் அச்சினில் ஆணி
பெருந்தேர் மக்களெனப் போற்ற,
உற்சவர் என்றவர் குறிக்கோள்
ஊர்வலம் சுற்றிடக் கண்டீர்!

அழகினுக் கோர் அலங்காரம்
ஆக்கியே தள்ளியே ரசிப்பர்,
அவர்களின் காலக் கழிவில்
தள்ளியே ரசிக்கும் பிள்ளை…!

அச்சிடை உருவிட ஆணி
அனைத்துமே குலையக் கீழ்சாயும்
எந்நிலை நாமுயர்ந்த போதும்
அந்நிலை அச்சாணி யாரெவரோ?
என்றென்றும் மறவாதே நீயும்
எந்நாளும் உருளலாம் நற்தேராய்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !

 » Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே…  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

மரபுக் கவிதை

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி,
வண்ண மயில்கள் ஆடுது;
வாலிபத்துச் சோலையிலே,
வந்து நின்று ஆடுது;
வளைக்கரங்கள் கோர்த்திங்கு,
வட்டம் சுற்றி ஆடுது;
கிறுகிறுத்துப் போகும் தலை,

 » Read more about: ஆடிடு பெண்ணே  »