வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா?
பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்
கார்கால கன்னிபோல  கனத்திருந்தால் பழமாகி
சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!!

மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.
பலநாளின் பலந்தரவே பசுமையாக மலர்ந்திடுமே.
அலர்ந்திடுமே அந்திவேளை அழகான அல்லிமலர்
உலர்ந்தமனம் உவகைகொள்ளும் உள்ளமெங்கும் இன்பவெள்ளம்.

மணக்கின்ற மலர்களுக்கும் மறுவாழ்வு தந்திடுவோம்
வனப்புடனே காத்திடுவோம் வரம்வேண்டி நின்றிடுவோம்
கனப்போழுதும் மறவாது களிப்புடனே போற்றிடுவோம்.
மனம்முழுதும் ரசித்திடுவோம்  மலரட்டும் மொட்டுகளும்.

மண்ணுலகில் பிறக்கின்ற மனிதம்யாவும் பிணமாதல்
கண்களினால் காணுகின்ற காட்சியன்றோ உலகினிலே.
விண்ணுலகைச் சென்றடைதல் விந்தையல்ல . இஃதுண்மை.
எண்ணிலடங்காப் பிணங்களெல்லாம் எந்நாளும் எழுவதில்லை.

தமிழகத்தை நாசமாக்கும்  தரமில்லா இனக்கொலைகள்.
இமைப்பொழுதும் மறக்கமுடியா இரக்கமில்லா வன்முறைகள்.
சுமைதாங்கும் மக்களினம் சுடலைக்குள் போயிற்றே!!!!
தமிழகமே கலங்கிநிற்கும் தலையில்லா முண்டங்கள்.!!!

மழலைகளும் பணிசெய்தால் மங்கிடுமே மண்ணுலகம்
உழவுக்கு மாடுபோல உருவாக்கும் இவ்வெண்ணம்.
குழந்தைகளும் கூலிகளா?  குலம்தழைக்க வந்தவரா?
அழகான கல்வியுமே அவர்களுக்கும் வேண்டுமென்பேன்!!!!


1 Comment

Saraswathi · மார்ச் 29, 2019 at 19 h 24 min

அருமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...