மழை பெய்த மலைகளிலே
        மறுகி ஓடும் நீரோடை;
குறுகிய தோர் காட்டாறு
        கூடி வீழும் அருவிகளும்;
அடித்து வந்த மூலிகையின்
        அளவற்ற நறு மணங்களுடன்;
பரவி ஓடி வந்தநதி
        படர்ந்ததே சம வெளிகளிலே !

கரை கட்டும் சரிகைச்சேலை
        காற்றிலசைந்து நடந்தார்ப் போல்;
மணல் படுகை மீதெல்லாம்
        நதியாய் ஓடும் நீர்ச்சேலை.
இருகரையை வரிந்து கட்டி
        இசைந்த பச்சைச் செழிப்பூட்டி;
இகமெல்லாம் இழையோடி நிற்கும்
        இன்னுயிர்க் கமுதாகும் இன்நதியே !

ஓடிக் களிக்கும் நாளெல்லாம்
        உவந்து நீரால் அமுதூட்டும்;
உலர்ந்து கிடக்கும் நாளினிலும்
        ஊற்றா யிங்கு உவப்பளிக்கும்;
ஆடி அசைந்து கரைகளெல்லாம்
        அமுதுக் கிண்ணம் ஆக்கியபின்;
தேடி ஓடிச் சேர்ந்தடையும்
        தேர்ந்த ஆழி அன்பனுடன் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !

 » Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே…  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

மரபுக் கவிதை

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

 » Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.  »