ஏற்றிடுவோம் தீபத்தை நன்னாளில்
      எத்திக்கும் பரவிடுமே மகிழ்ச்சிவெள்ளம்
போற்றிடுவோம் பண்டிகையை அந்நாளில்
      பொங்கிடுமே புதுவாழ்வு மக்களிடம்
மாற்றங்கள் வந்திடுமா நாள்தோறும்
      மண்ணுலகி லின்பமுமே தாங்கிடுமா
சீற்றங்கள் வேண்டாமே எந்நாளும்
      சிறப்புடைய தீபவொளி ஒளிர்விடட்டும் .

கொடுக்கின்ற மனிதரெல்லாம் இன்றுமாறிக்
      கொடைகுணத்தை இழந்துவிட்டார் இவ்வுலகில்
அடுக்கடுக்காய் மக்களினம் பெருகிப்போய்
      அன்புடைய நெஞ்சமுமே மறந்துவிட
நடுத்தெருவில் நிற்கின்ற வறியோர்கள்
      நாயைப்போல் உணவின்றி அலைகின்றார்
எடுக்கின்ற உறுதிமொழி அனைவர்க்கும்
      ஏற்புடைய மொழியாகச் செய்தல்வேண்டும் .

கொண்டாட்டம் வீதியிலே செல்வர்க்கு
      கொடுப்பினையும் இனியில்லை வறியார்க்கு
திண்டாட்டம் இந்நாளில் தேவைதானா?
      திக்கெட்டும் தீப்பொறிகள் வெடிகளாலே
பண்டங்கள் சுவைத்திடுமே பலருக்கும்
      பழையசோறு போதவில்லை ஏழ்மைக்கு
கண்களிலே நீர்பெருக எழுதுகின்றேன்
      காசினியில் இந்நிலைமை மாறிடுமா ?

தித்திக்கும் தீபவொளி யாவர்க்கும்
      திகழட்டும் மக்களுக்குள் ஒற்றுமையே
எத்திக்கும் சமுதாயம் வாழவேண்டின்
      எண்டிசையும் சமத்துவத்தை பரப்பிடுவோம்
மத்தாப்புக் குச்சிகளும் சொல்லுமொழி
      மங்காத வாழ்வுநெறி வேண்டுமென்றே
புத்தாடை அணிந்திடுவோம் நாமெல்லாம்
      புத்துலகைச் சமைத்திடவே புறப்படுவோம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !

 » Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே…  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

மரபுக் கவிதை

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

 » Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.  »