தோன்றிய கால முதல் தூண்டாய்
மணி விளக்காய் தோன்றிய.
தமிழ்த் தாயின் தலைமகனே.
குமணன் தலை கொடுக்க முன்வந்தான்
நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய்
புறநானூறு அகநானூறு ஆக
மொத்தம் எண்ணூறு என
எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
சங்கத் தமிழின் சங்கதிகளை
சரித்திரமாய் சொன்னவன் நீயே
மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு
கோடு கிழித்த வள்ளுவனுக்கு
வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே
உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே
மூட நம்பிக்கையை முட்டித்தள்ள
முழு வீச்சில் முயன்றவனே
சினிமாக்கள் அறியாமையை விதைத்தபோது
வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிவோடு கலந்தவன் நீயே
கதா கலட்சமாக கவி அரங்குகள்
காட்சி அளித்தபோது கவி
அரங்குகளில் புரட்சி செய்த புதுமையாளனே
கழிக்க முடியாத கடன் பிறப்புகளை
பெற்ற கலைஞரே. உடன் பிறப்புகளை விட்டு
விடை பெற்றாய் என்றார்கள் உனக்கு ஏது மரணம்.
மரணம் சிலரை கிழித்துப் போடும்
உன் மரணமோ எங்களை கிளர்ந்து
எழ வைத்து இருக்கிறது. படமாகி
போனவர்கள் மத்தியில் நீ பாடமாகி நின்றதால்
பல்கலைக் கழகங்கள் தரமுடியாத ஞானத்தை
உன் பயணம் தந்து இருக்கிறது
ஓயாமல் உழைத்தவன் அதோ
உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று
சவப்பெட்டியில் எழுதச் சொன்னதாக சொன்னார்கள்
உனக்கு ஏது உறக்கம்
முத்தமிழாய் யுகம் யுகமாய் எங்களோடு
எங்களோடு நீ உரையாடிக் கொண்டிருப்பாய்.
ஆம் தமிழாக எங்களை தாலாட்டிக் கொண்டிருப்பாய்
புதுக் கவிதை
பெண்ணான வெள்ளிப்பூ
சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..