தமிழைப் போல
நலமுடன் வளமுடன்
வாழ்க! வாழ்க!!

இலக்கு நோக்கி இயங்கு கின்ற
இனிய தோழர்
தமிழ்நெஞ்சம்- எதையும்
துலக்க மாக துணிந்தே செய்யும்
தூய நேயர்
தமிழ்நெஞ்சம்

அன்பில் பண்பில் ஆற்றல் தன்னில்
அகம்போல் சிறந்தவர்
தமிழ்நெஞ்சம்- தோழர்
இன்று போல இன்பமாக
இயற்றமிழ் ஆவார்
தமிழ்நெஞ்சம்

நல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர்
நாடு போற்றும்
தமிழ்நெஞ்சம்– தமிழ்ச்
சொல்லைப் போல செழுமை ஆனவர்
செயல்திறன் கொண்டவர்
தமிழ்நெஞ்சம்


7 Comments

ஈழபாரதி · ஜூன் 26, 2018 at 13 h 16 min

புத்தகங்களை மட்டுமல்ல
அன்பையும் அளவில்லாமல்
அள்ளிக்கொடுக்கும் நெஞ்சம்

கா.ந.கல்யாணசுந்தரம் · ஜூன் 26, 2018 at 13 h 18 min

இன்று பிறந்தநாள் காணும் எழுத்தாளர் அமின் முஹம்மத், ஆசிரியர் ” தமிழ்நெஞ்சம் ” (பிரான்சு) அவர்களுக்கு எங்களது இனிய வாழ்த்துகள். வளரும் கவிஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இனிய அன்பர் நெடிது வாழ இறைவனை வேண்டுகிறோம்.

………கா.ந.கல்யாணசுந்தரம்

மற்றும் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்து உறுப்பினர்களும் கவிஞர்களும்.

பாவேந்தல் பாலமுனை பாறூக் · ஜூன் 26, 2018 at 13 h 19 min

தமிழொடு வாழும் நெஞ்சம்
தகைமையில் உயர்ந்த நெஞ்சம்
அமிழ்தினில் இனிய தான
அன்பினில் கனிந்த நெஞ்சம்!

பிறந்தநாள் இன்று அந்தப்
பெருமகன் தன்னை வாழ்த்தும்
அரியதோர் வாய்ப்பைப் பெற்றேன்
அன்னார்க்கு என்றன் வாழ்த்து!

நிறைநலம் பெற்று வாழ்க!
நீடூழி வாழ்க!வாழ்க!!
இறையவன் அருளி னாலே
இன்பமே பெற்று வாழ்க!

கவிஞர்.அ.முத்துசாமி · ஜூன் 26, 2018 at 13 h 23 min

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !

பாவலரே பைந்தமிழே !
பண்பாட்டின் பேருருவே !
காவலராம் கவிதைக்குக்
கற்கண்டின் தேன்பாகாம் ,
நாவலராம் நற்றமிழாம்
நாடுபோற்றும் நல்லவராம் ,
சேவகராம் நாட்டின்கவி
செல்வமேநீர் வாழியவே !

கவிஞர்.அ.முத்துசாமி , தாரமங்கலம் .

பெண்ணியம் செல்வக்குமாரி · ஜூன் 26, 2018 at 16 h 45 min

பாடலோடு பண்ணிசைக்க
கடலோடு அலையிசைக்க
பூவோடு காற்றிசைக்க
இப்புவியில் உன்பேர் இசைக்க…
நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன்..

தமிழ்நெஞ்சம் இதழாசிரியர்
தமிழ்நெஞ்சம் ஐயா அவர்களை
இருகரம்கூப்பி வாழ்த்துகிறேன்…

கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம் · ஜூன் 26, 2018 at 16 h 46 min

வாழ்த்துகள் ! வாழ்க பல்லாண்டு !

முனுசாமி பாலசுப்ரமணியன் · செப்டம்பர் 25, 2018 at 19 h 19 min

தமிழ் நெஞ்சம்
கடல் கடந்து போனாலும்
காத தூரம் போனாலும்
உடலோடு மட்டுமல்ல
உயிரோடு கலந்து விட்ட
உலகமுதல் மொழியாம்
தமிழை மறந்தாரில்லை
தனிநிகர் பாவலர்
தமிழ்நெஞ்சம்
இதழும் நட்துகிறார்
இளைஞருக்கு உதவுகிறார்
கலங்கரை விளக்கமாய்
கவிஞருக்கு விளங்குகிறார்
நட்பை பேணுவதில்
நல்லுறவை பேணுவதில்
நானிலமும் வியந்திட
நடைபயின்று வருகின்றார்

என் நெஞ்சுக்கு நெருக்கமான
தமிழ்நெஞ்சம் வாழ்க நீடு!
தமிழ் வளர்த்து வாழ்க நீடு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கட்டுரை

மாற்றி யோசி

அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது.

 » Read more about: மாற்றி யோசி  »

கட்டுரை

மலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்

மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தேர்ந்தெடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப் பார்க்கப்படுகின்றது.

 » Read more about: மலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்  »

நூல்கள் அறிமுகம்

தங்கையின் மணவிழா மலர்

திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.
மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

 » Read more about: தங்கையின் மணவிழா மலர்  »