ஆனந்தத் தாண்டவம் ஆடி
அந்தரத்தில் அபிநயம் காட்டி
அண்டத்தில் மின்னும் சிற்றொளியாய்
ஆர்பரித்து திரிந்தன பல காற்றாடிகள்

விசும்பை உரசிய அகங்காரத்தில்
விண்ணை நோக்கிப் பறக்கத் துடிக்கும்
ஒரு சிற்றிளம் காற்றாடி முயற்சி கண்டு
வெந்தணல் கூட்டும் ஏளனம் பேசி
சிற்றிளம் மதலையின் மனதை உடைத்தன…..

எண்ணங்கள் உயர்வாய் இருப்பினும்
திண்ணம் தளர்ந்ததால் சாய்ந்து
வண்மை இழந்த வாலிபமாய்
மண்ணைக் கவ்வியது சிறு காற்றாடி…..

வெற்றி பெற்ற வேந்தனாய்
மிடுக்காய் பறக்கும் காற்றாடிகள் கண்டு
வெட்கி வேதனையில் கசிந்தது……

கலங்கி அழுவதால் பயனில்லை
காத்திருந்தால் காலம் கை கூடுவதில்லை
முயலாமையை முடிந்து வைத்தால்
இயலாமை நமக்கு இயல்பாய்  போய்விடும்……

காற்றின் சீற்றத்தால் தடுமாற்றம்
கட்டிய நூலிழையால் சிறு நடுக்கம்…….

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது
உறுதி கொண்டு விண்ணை நோக்கியது
உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது
நம்பிக்கை ஒளி கொந்துதலால்
தும்பிக்கை பலம் உந்துதலால்
எம்பி எம்பி உயர எழுந்தது
எதிர்படு இடர்களை கடந்தது
எதிர்நோக்கு உச்சியை எய்தது

எள்ளி நகையாடிய ஏமாப்புகள்
தள்ளி நகர்ந்து தலை கவிழ்ந்தன……

ஆகாசம் அண்டிய சிற்றிளமோ
சாகசக் களிப்பில் துள்ளியது
அருகில் பறந்த நேசங்களுடன்
அளவளாவி மகிழ்வைப் பகிர்ந்தது……

இலக்கு அங்கு முடியவில்லை
இதயத்தில் துடிதுடிப்பு அடங்கவில்லை
அனிச்சை அதற்கு அனுகூலமானது
அடைவு இல்லா அண்டசராசரம்
அடுத்த அதன் அடுகளமானது……

இகழ்ச்சி வாழ்வில் துச்சமே
வீழ்ச்சி துவண்டால் நிச்சயமே
எழுச்சி நெஞ்சில் பரிச்சயமானால்
புகழ்ச்சி ஆரம் என்றும் உன்வசமே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 04

04

ஒரு சின்ன விதைக்குள் தான் மிகப் பெரிய விருட்சம் ஒளிந்திருக்கிறது. அது போல தான் ஹைக்கூ..

தனக்குள் பல கோணங்களையும் வாசிக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 04  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 03

03

ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம்.மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனத் தமிழில் சொல்லப்படுவதெல்லாம் ஹைக்கூவிற்கும் பொருந்தும்..மூன்று அடிகளில் வாமன அவதாரம் எடுத்த ஒரு இலக்கிய வடிவம் ஹைக்கூ..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 03  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 02

02

ஹைக்கூ ஜப்பானில் ஜென் புத்தமதத் துறவிகளால் ஜென் சார்ந்தும்.. அவர்களது வாழ்வியல்.. இயற்கை சார்ந்தும் எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம்.. அக்கவிதை ஜப்பானில் பிறந்த விதம் மற்றும் அக்கவிதையின் முன்னோடிக் கவிஞர்கள் குறித்தும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 02  »