ஓதி முடித்தத் திருமறையை உறையிலிட்டு மூடி வைத்துவிட்டு எழுந்த உஸ்மான் ஹாலில் இருந்த இருக்கையில் வந்து அமரவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அவர் அண்ணன் மகன் அஸ்கர், “அஸ்ஸலாமு அதலக்கும் சாச்சா…” என்றவாறு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“வஅலைக்குமுஸ்ஸலாம் அஸ்கர். இப்பத்தான்ன் வர்றியா?” என்று கேட்டார்.

“ஆமாம் சாச்சா..” என்ற்வாறு புத்தகங்களை ஷெல்ஃபில் வைத்துவிட்டு வந்து அவர் அருகில் அமர்ந்தான் அஸ்கர்.

“சாச்சா, உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் காட்டப் போறேன்.” சொல்லிக்கொண்டே அலைப்பேசியை எடுத்து ஆன் செய்தான் அஸ்கர்.

“அப்படி என்னப்பா அந்த அதிசயம்?” ஆவலாய்க் கேட்டார் உஸ்மான்.

அலைப்பேசியில் பதிவு செய்துக் கொண்டு வந்த அந்தப் படத்தைக் காட்டினான் அஸ்கர்.

“ஒரு பெண்மணி உருளைக் கிழங்கு வெட்டும்போது இதைப் பார்த்திருக்கிறாள்.” என்றவாறு அலைப்பேசியை உஸ்மானிடம் கொடுத்தான் அஸ்கர். அதை அவர் வாங்கிப் பார்த்தார்.

பாதி வெட்டப்பட்ட நிலையிலிருந்த அந்த உருளைக்கிழங்கில் “அல்லாஹ்” என்று அரபியில் எழுதி இருந்தது.

அதைச் சாதாரணமாகப் பார்த்துவிட்டு அலைப்பேசியைத் திருப்பிக் கொடுத்தார் உஸ்மான். அவர் முகத்தில் எந்த மாற்ற்மும் இல்லை.

சாச்சா ஆச்சரியத்தால் துள்ளுவார். எல்லோரையும் அழைத்துக் காட்டுவார். என்றெல்லாம் எதிர்பார்த்த அஸ்கருக்குப் பெருத்த ஏமாற்ற்மாக இருந்த்து.

“என்ன சாச்சா நீங்க? எவ்வளவுப் பெரிய அதிசயத்தைக் கொண்டு வந்து காட்டி இருக்கிறேன். நீங்க ஒண்ணுமேச் சொல்லமாட்டேங்கறீங்க?” என்று நொந்துக் கொண்டான்.

அமைதியாக அவனைப் பார்த்த உஸ்மான் சொன்னார்: “அஸ்கர்.. வானத்தில் ஒரு நாள் மக்ரீப் நேரத்துல சிவந்த மேகங்களுக்கிடையில் “அல்லாஹ்” என்ற் எழுத்துக்கள் தெரிந்தபோது மக்கள் அதை ஆச்சரியமாகப் பார்த்தனர். அதே போன்று வெட்டப்பட்டு கசாப்புக் கடையில் தொங்கிக் கொண்டிருந்த ஆட்டின் தொடையிலும் “அல்லாஹ்” என்று காணப்பட்டது. இதுபோல் உருளைக் கிழங்கு, முட்டகோஸ், பூசணிக்காய் போன்ற காய்கறிகள் வெட்டப்படும்போது அவ்வப்போது “அல்லாஹ்” என்ற வார்த்தை தெரிவது ஆங்காங்கே நிகழ்ந்துக் கொண்டுத்தான் இருக்கிறது.”

“அப்ப இது அதிசயம்தானே சாச்சா?”

“இல்லை.”

அதிர்ந்தான் அஸ்கர்.

“ஏன் சாச்சா அப்படி சொல்றீங்க?”

“எங்கும், எதிலும் பரிபூரணமாய் நிறைந்திருப்பவன்தான் அல்லாஹ். அதனால் அவன்பெயர் இப்படித் தெரிவது ஒன்றும் எனக்கு ஆச்சரியமான விசயமாகத் தெரியவில்ல.”

இப்போது அஸ்கருக்குப் புரிந்தது.

அவன் மௌனமாக இருப்பதைப் பார்த்த உஸ்மான், “அஸ்கர், இது ஓர் அதிசயமான விசயம் என்று நீ எல்லோருக்கும் காட்டிக் கொண்டுத் திரிவதில் பிரயோஜனமில்லை. முத்லில் நமக்குக் கடமையாக்கப்பட்டதைப் பின்பற்று. பிறகு இதையெல்லாம் பார்க்கலாம்.” என்றார்.

அதைக் கேட்டு லேசாகக் குழம்பினான் அஸ்கர்.

“சாச்சா.. நீங்க என்ன சொல்றீங்க..?”

“போன வாரம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த் கிரிக்கெட் விளையாட்டை நீ எவ்வளவு ஆர்வமாய் அமர்ந்து பார்த்துக்கிட்டிருந்தே? தொழுகைக்கு நேநரமாகியும், அதை உன் சகோதரி வந்து நினைவூட்டிய பிறகும் நீ அசையவே இல்லை. ஏன்? அப்படி என்ன அவ்வளவு ஆர்வம் அந்த விளையாட்டில்? அந்த ஆட்டம் முடிந்த பிறகே நீ களா தொழுதிருக்கே. இது அவசியமா? ‘அல்லாஹ்’ என்ற வார்த்தை அதிசயமாகத் தெரிகிறது என்று நீ எல்லாருக்கும் காட்டிக் கொண்டுத் திரிவதால் புண்ணியம் கிடைக்கும் என்று நீ எண்ணுவதைவிட முதலில் கடமைத் தவறாமல் ஐவேளையும் தொழுதுவிட்டு அதன் பிறகு வேண்டுமானால் நீ மற்றதை செய். புரியுதா?”

‘புரிந்தது’ என்கிற பாவனையில் தலையசைத்தான் அஸ்கர்.

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »