கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது. அதாவது புலவர்கள், கவிஞர்கள் அரசவையிலே அரசனை, நாட்டினை புகழ்ந்து பாடினார்கள். பரிசுகள் பெற்றார்கள். விதிவிலக்குக்காக வெறும் புகழ்ச்சிகாக மன்னர்களைப் பாடாத புலவர்களும் இருந்தார்கள். இதேவேளை புரவலர்கள் பலர் புலவர்களை வாழ வழிசெய்து – பொருள் ஈந்து கவிதை வளர்ச்சியடைய துணை நின்றார்கள்.

கவிதையென்பது ஓர் இனிய கலை. வசனங்கள் வாக்கியங்கள் உணர்ச்சிகளின் நகல் என்றால் கவிதை என்பது உணர்ச்சிகளின் உயிர் எனலாம்.

பழங்காலத்தில் மனிதன் பாடல்களை ஜெபித்து உச்சாடனம் செய்துள்ளமையை காண்கிறோம். அறநெறிகளை எடுத்துரைப்பதற்கும் கவிதை மந்திரம் போர காணப்பட்டதாலேயே பாரதியார் கூட “ மந்திரம் போல வேண்டும் அடா, சொல்லின்பம்” ( கவிதை நயம் – பக்கம் ஒன்று க.கைலாசபதி, முருகையன்) வசனம் வெறும் சொற்குவியல் எனலாம். வசனம் உள்ளக்கிளர்ச்சியை உருவாக்காது. ஆனால் கவிதை உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடியது.

“ வெண்ணிலா வா” என்றால் அது வசனம். “வா வெண்ணிலா” என்றால் அது கவிதை. கவிஞன் தனது அனுபவத்தைச் சரியாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உவமை, உருவகங்களை பயன்படுத்துகிறான். கற்பனை சொல்லாட்சி அவனுக்கு துணை புரிகின்றன. நல்லமொழி கவிதைக்கு தேவை. கவிதையில் ஓர் இசை லளிதம் லாவண்யம் காணப்படும். வசனங்களில் அப்படியல்ல.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது. அதாவது புலவர்கள், கவிஞாகள் அரசவையிலே அரசனை, நாட்டினை புகழ்ந்து பாடினார்கள்: பரிசுகள் பெற்றார்கள். விதிவிலக்ககாக வெறும் புகழ்ச்சிக்காக மன்னர்களைப் பாடாத புலவர்களும் இருந்தார்கள். இதேவேளை புரவலர்கள் பலர் புலவர்கள் வாழ வழிசெய்து – பொருள் ஈந்து கவிதை வளர்ச்சியடைய துணை நின்றார்கள்.

இந்தவகையில் கவிதை பண்டிதர்களுக்கும், படித்தவர்களுக்குமாகவே இருந்து வந்தது. ஆனால் தமிழிலக்கிய வரலாற்றில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான் இதனை மாற்றி அமைத்தார்.

“ சுவை புதிது, பொருள் புதிது , வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை…” என அதுவரையில் வழங்கிய கவிதைத்துறை வெகுஜனங்களுக்கான ஒரு வடிவமாகவும், பாடுபொருளாகவும் மாற்றியமைத்தார்.
கவிதைகள் பல்வகைப்படும். நெடுங்காவியங்களாக மலர்ந்தவைகளும உள்ளன. குறிப்பாக கவிதையை மரபுக்கவிதை, புதுக்கவிதை எனப் பாகுபடுத்தலாம். இது ஒரு பெரும் பிரிவாகும். எதுகை, மோனை, நயம், கற்பனை, அணி போன்ற யாவும்
இலக்கணப்படி அமைந்த கவிதைகளை பொதுவாக மரபுக்கவிதைகள் எனலாம்.

நவீனக்கவிதைகள் இதன் அடுத்தக் கட்டத்தில் உள்ள கவிதைகள் ஆகும். ஓரளவு இலக்கண வரப்பிற்குள் வரும் இவ்வகை கவிதைகளை நவீன கவிதைகள் எனலாம். மற்றது புதுக்கவிதைகள், இலக்கண வரம்பிற்குள் வராத வசனக்கவிதைகள் ஆகும். பாரதியாரும் சில வசனக் கவிதைகளை எழுதியுள்ளார்.

“பாரதி தனது எண்ணங்களை எழுத்தாக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கு அவரது படைப்புக்களை ஆராய்வோருக்கு புரியும்” என்கிறார் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் வல்லிக்கண்ணன் (பக்கம் 10) பாரதியாரின் காட்சிகள் கவிதை தொகுப்பு புதுக்கவிதைக்கொரு உதாரணம் எனலாம். காட்சிகள் வசனங்கள் தான் எனக் கூறுவோர்களும் உள்ளனர். பாரதி வசனம், கவிதை என்பவற்றிற்கு இடையேயான இடைவெளியினை அறிவான். இதற்கு ‘‘பாஞ்சாலி சபதம்’ நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணனன’ எனும் கவிதைகளும், மேலும் பாரதி எழுதியுள்ள ‘ஸ்சூர்யாஸ்தமனம்’ என்ற வசனப்பகுதியும் நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே அவர் ‘வசனக்கவிதை’ என்ற புதிய சோதனையை மேற்கொண்டார்.” என வல்லிக்கண்ணன் தனது புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் கூறுகிறார். (பக்கம் 11) இந்த வகையில் பாரதிதான் “தமிழ்ப் புதுக்கவிதையின் மூலக்கர்த்தா ஆவார். ஆனால் பொதுவில் புதுக்கவிதையின் மூலக்கர்த்தா வால்விட்டமன் ஆவார். இலக்கணம் தெரியாமல் வால்விட்மனோ தமிழில் பாரதியோ புதுக்கவிதை எழுதவில்லை என்பதை புரிந்துக் கொள்ளல் நலம்.

‘VERS LIBREஎன்ற பதம் சுதந்திரத்தை நோக்கி என்று அர்த்தப்படும் இலக்கண விதிகளையும் மீறி எழுதப்படுவது VERS LIBRE என்பது புதுக்கவிதையை கூற எழுந்த சொற்பதம் ஆகும்.

பாரதிக்கு பிறகு (இரட்டையர் இருவர் பிரபல்யம் பெற்றனர். ஒருவர் ந. பிச்சமூர்த்தி மற்றவர் கு.ப. ராஜகோபாலன் எமது வழக்கில் இலகு கவிதை ‘FREE VERS’ என்றழைக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்டோரை தவிர மேலும் பலர் புதுக்கவிதை எழுதினார்கள். தொடர்ந்து இன்று வரை பலர் புதுக்கவிதை எழுதி வருகின்றனர்.

மணிக்கொடி, காலமோகினி போன்ற இதழ்கள் புதுக்கவிதைக்கு களம் அமைத்துக் கொடுத்தன.

இன்று புதுக்கவிதையின் வடிவங்களும், கவிதைகளும் மாறிவிட்டன. சிறிய மணிக் கவிதைகளும் உள்ளன. கவிதையில் பல பரிசோதனை முயற்சிகளும் மஹாகவி உருத்திரமூர்த்தி, குறிஞ்சி தென்னவன் போன்றவர்களினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது போன்று இந்தியாவிலும் கவிதைகள் பல வடிவங்களை எடுத்துள்ளன. பலர் பல பரிசோதனை கவிதைகளையும் படைத்துள்ளனர்.

புதிய விமரிசனங்கள் புதுக்கவிதையின் தரம் பற்றியும் பேசுகின்றன. புற்றீசல் போல் வரும் இவ்வடிவம் எல்லாராலும் எழுத முடியும் என்றொரு மாயையை ஏற்படுத்தி இருந்தாலும் யதார்தத்தில் பெரும்பாலானோரின் புதுக்கவிதைகளில் வெற்றிப் பெறவில்லை என்ற உண்மையை காட்டி நிற்கின்றது.

யப்பானிய ஹைக்கூ கவிதை வடிவம் தமிழிலும் நிலைப் பெற்ற ஒன்றாக உள்ளது. யப்பானில் தோன்றிய ஹைக்கூ வடிவம் பின்னர் பிரான்சிய இலக்கியத்துடன் இணைந்து வளர்ச்சி பெற்றது எனலாம். பாN‘h, இஸ்ஸா, ‘pகி, சென்றீயூ போன்றோர் இவ்வடிவத்தினை செழுமைப்படுத்தியதாக அறிகிறோம். மூன்று வரிகளில் மிகச் கச்சிதமாக நம் உள்ளத்தினைச் சென்று தைத்திடும் வீரியம் இந்த ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு.

கொபயாஷி இன்ஸா இவர் ஒரு நாட்டுப்புறக் கவிஞர் எனலாம். ஏனெனில், சின்னச்சின்ன பூச்சிகள், பறவைகள் பற்றி நிறைய எழுதினார். அவரது பிரசித்தமான கவிதை ஒன்று

கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொண்டிருக்கிறது

எனும் ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் எனும் நூலில் (பக்கம் 17) கூறிச் செல்கின்றார்.

இலங்கையில் முதன் முதலாக தமிழில் வெளிவந்த சு. முரளிதரனின் கூடைக்குள் தேசம் கவனத்திற்குரிய ஹைக்கூ தொகுதியாகும். 76 ஹைக்கூ கவிதைகளை உள்வாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது.

போதுமான ஆட்களேறியும்
புறப்படவில்லையே புகையிரதம்
லயன்கள்

என்றும்

பசுமையுடன் இளமை மூடிய
காவியுடன் வெளியேற்றம்
இலைகள்

என்றும் அவர் தரும் கவிதைகள் உள்ளத்தைத் தொடுகின்றன.

தொடர்வண்டி வரிசையில் அமைந்திருக்கும் லயன்கள் மாற்றம் ஏதுமின்றி இருப்பதையே அவரது குறிப்பிட்ட முதல் ஹைக்கூ கூறுகின்றது. இரண்டாவது கவிதையின் கற்பனை கவிஞனின் மேதாவிலாசாத்திற்கு ஒரு பதம்.

தொடர்ந்து இலங்கையில் பலர் ஹைக்கூ கவிதை தொகுதிகள் தந்துள்ளனர். ‘மனசின் பிடிக்குள்’ தந்த பாலரஞ்சனி சர்மா, நறுக் தந்த மொழிவரதன் அவர்களுள் சிலர் மேமன்கவி போன்றோர் ஹைக்கூ கவிதையுடன் நெருங்கிய ஈடுபாடுடையவர்களாக உள்ளனர்.

அண்மைக்காலமாக மூத்த படைப்பாளி கவிஞர் நீலாபாலன் (கலமுனை பூபால்) அவர்களது ஹைக்கூ வரிகளையும் காணக்கூடியதாக உள்ளது.

எனது நறுக் தொகுதியில் வரும் பின்வரும் கவிதையும் பலரால் என்னிடம் சிலாகித்து பேசப்படுகிறது

கிழிந்த உடையை
இழுத்து தைத்தது
பட்ஜெட்

என்ற ஹைக்கூவும்

அறுவை சிகிச்சை வெற்றி
நோயாளி இறப்பு
மெல்லத் தட்டப்பட்டது
என் அறைக்கதவு
ஓ… தென்றல்

போன்றன குறிப்பிடத்தக்கன. எனவே இறுதியாக கவிதை என்ற பொருள் பற்றி நிறையவே பேசலாம். கவிதை வடிவங்கள் மாறியுள்ளன. புதிய வடிவங்களை அவை பெற்றுள்ளன. பாடுபொருள், உள்ளடக்கம், கற்பனை, சொற்களின் தெரிவு, உபயோகம் போன்றன யாவுமே மாற்றம் பெற்றே வருகின்றன.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »