விளக்கொளியில் மறைந்திருக்கும்
மையிருட்டில் பொலிவிழந்த முகங்களின்
அடையாளங்கள் நிலைத்திருக்கும்!
தெளிவற்ற சிந்தனைக்குள்
செயல்பாட்டின் விரல்கள் எல்லாம்
முடங்கியிருக்கும்!
ஒன்று கூடிப் பேசினாலும்
முடிவற்ற சூழலுக்குள்
பொய்மையும் புறங்கூறலும்
மண்டிக்கிடக்கும்!
இலக்கற்ற பயணங்களில்
எண்ணற்ற பாதைகளின்
குறுக்கீடுகளின் ஆளுமை
குவிந்திருக்கும்!
வண்ணமற்ற ஓவியத்தில்
எண்ணமதை ஈர்க்காத கிறுக்கலின்
வெளிப்பாடுகள் ஒளிந்திருக்கும்!
புனரமைத்திடா புராதான
சான்றுகளில் கலாச்சார
படிமங்கள் பொதிந்திருக்கும்!
வடித்துவைத்த சிலைக்குள்
சிற்பியின் கைவண்ணம்
எழிலோடு பரிமளிக்கும்!
பேசும் மொழிகளுக்குள்
பிழையில்ல சொற்களோடு
இலக்கணமும் பிறப்பெடுக்கும்!
மண்சார்ந்த கலாச்சாரம்
தொலைத்துவிட்ட வாழ்வுதனில்
தரமற்ற உருக்குலைந்த
திட்டங்கள் துரத்திவரும்!


1 Comment

கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை. · மார்ச் 31, 2018 at 16 h 05 min

தமிழ்நெஞ்சம் தமிழுக்கு சிறப்பான சேவை செய்து கவிதைகளுக்கு நல்லதொரு இடமளித்து வருகிறீர்கள். நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்