கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது
தன் விழுதுகளை நம்பியே
நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …

அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…
லட்சோபலட்சம் பைங்கிளிகளின்
ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.
கிளிகளின் கொஞ்சல்களும்
பழங்களைக் கொத்தியுண்ணும் இன்பமும்
தாய்வயிற்றில் உதைக்கும்குழந்தையெனக்
கொள்கிறது அந்த ஆலமரம்

நாற்புறமும் சாலைகளை சத்தமிட்டபடியே
குறுவண்டி பெருவண்டிகளெனப்
பெருகியோடும் பேராற்றின் நடுவே
அது செம்மாந்து நிற்பதை பார்த்தவர்கள்…
சிலர் புரியாமல் உமிழ்ந்து போகிறார்கள்
சிலர் பாவம் என உளறிப் போகிறார்கள்
தன்நிழலை நம்பியே நிமிர்ந்து நிற்கும்
அடர்ந்த வானமாகும் அந்த மரம்…
வனமாகவும் காட்சியளிக்கிறது…

வழிபோக்கர் களின் ஓய்விடமாகவும்
கைவிடப்பட்ட வர்களின் வாழிடமாகவும்
செல்லரித்த தன் அடிப்பகுதி
சிலவற்றின் படுக்கையிடமாகவும்…

நாற்சந்தியில் நிற்பதைப் பற்றி
ஒருபோதும் கவலை கொண்டதில்லை
மாறாகத் தாராளமாய்
வானம் தொட்டு வளர்க்க எண்ணும்
யாவரையும் யாவற்றையும்

உண்ணும் பழங்களையும் நிழலையும்
ஏன் தன்னையே தின்ன கொடுத்திருக்கும்
யாவர்க்குமாகிய அந்த ஆலமரம்
இன்றும் காட்சியளிக்கும் நாற்சந்தியில்
கிளியுடைய மீனாட்சியம்மனாக…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்