சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!

இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…

பட்டாம் பூச்சி போலே நாங்கள் சிறகடிப்போமே…
பார்வை போகும் தூரம் வரை பறந்து செல்வோமே…
மொட்டாய் மலர்ந்து சிட்டாய்ப் பறந்து மணம் கொடுப்போமே…
மோதல் இல்லா உலகம் ஒன்றை நாம் படைப்போமே…

நாட்டுக்கேற்ற பிள்ளைகளாக நாம் வளர்வோமே
நானிலமே போற்றும் படி நாம் மலர்வோமே
பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி மனம் மகிழ்வோமே
பாலரில் தொடங்கி பல்கலை அறிவைத் தேடிவோமே

காற்றைப்போலே சுதந்திரமாய் நாம் பறப்போமே
கருணையுள்ள மனங்களிலே குடியிருப்போமே
ஊற்றைப் போலே நாளும் அறிவை உடன் வளர்ப்போமே
உண்மை நேர்மை அன்பை நாமும் சுமந்திருப்போமே
உண்மை நேர்மை அன்பை நாமும் சுமந்திருப்போமே

பெற்றார் பெருமை பேணும் வகையில் உயர்ந்திடுவோமே
பெரியோர் தமை நாம் மதித்து வாழ்ந்திடுவோமே
கற்றார் மகிமை ஓங்க நாமும் படித்திடுவோமே
காலம் அறிந்து அறிவை நாளும் வளர்திடுவோமே


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்