மியன்மார்…

மியர்மாரின் மிஞ்சி கிடக்கும்
மானிடம் நடுவில் பூத்துக்கிடக்கும்
இந்த கதறல்…

மழலையின் அழுகையை
நிறுத்த அன்னை அவள்
கொண்ட காட்சிதான்
ஒழிந்திருப்பது அன்று,
நயவஞ்சகம் கொண்ட மானிடம்
செய்த சூழ்ச்சிதான் இன்று அவள்
ஒழிந்தழுவது

மனம் இல்லா மானிடமே
பதில் தாரும்!
பால் கொடுத்த மார்புகள்
எங்கே ?
பால் குடித்த மழலைகள்
எங்கே.?
இறைவன் என ஓடிய
மானிடங்கள்
கால்களின்றி
காடுகள் தேடி
ஓடிவிட்டார்களா இன்று?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்