(அனுபல்லவி)

கண்ணே… கண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…
கனவின் நாயகன் நான்தானா…
காதல் கிளியே சொல்லிவிடு…

பெண்ணே… பெண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…
மனதினில் நிற்பவன் நான் தானா…
மனதை திறந்து சொல்லிவிடு….

(பல்லவி)

கண்டேன் கனவு என்றுரைத்தாய்… ;நீ
கனவினை கூற மறந்துவிட்டாய்…
கனவினில் பார்த்தது இது தானோ…
காதல் மானே சொல்லிவிடு…

(சரணம்)

கனவில் வந்தது நான் தானா…
காதல் கவிதை சொன்னேனா…
மனதை வென்று சென்றேனா…
மயக்கம் கொள்ளச் செய்தேனா…

தயக்கம் கொண்டு நின்றேனா….
தயங்கித் தயங்கி வந்தேனா…
உயிரில் ஒன்றாக கலந்தேனா…
உணர்வாய் கோவை சுவைத்தேனா…

வண்ண மயிலை ரசித்தேனா…
எண்ணம் முழுதும் லைத்தேனா…
கண்ணின் அழகில் கரைந்தேனா…
கருத்தாய் உன்னில் இணைந்தேனா..

மலரே!… உன்னில் அமர்ந்தேனா…
மலரின் தேனை சுவைத்தேனா…
மனதில் நிறைந்தவன் நான் தானா…
மனம் விட்டு கனவை சொல் தேனே…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...