(தரவு கொச்சகக் கலிப்பா)

புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
      மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
      அம்மானை யாடிடவே அழகவளும் வந்தாளே.

நற்றமிழின் சொல்லோச்சி நனிந்துவரும் நங்கையவள்
      பொற்புடைய குணவதியாள் பொறுமைக்கு பெருமையவள்
நற்குலத்து உதித்துவந்த நாணிலத்தின் சிறப்பவளே
      வற்றாத அன்புடைத்த ஆரணங்கு அவளன்றோ.

தமிழ்பூத்த நல்லுலகில் தங்கத்தின் பொலிவெனவே
      அமிழ்தூறும் சொல்லாடி அரவணைக்கும் நறுமணமே
கமழ்கின்ற பூவையவள் காதலிலே நிறைக்கின்றாள்
      இமகரனி ளெம்பேனோ இமையாகி குளிர்ந்தாளே.

கண்மணியாள் கவர்ந்திழுக்க காந்தளிதழ் விரலொக்க
      விண்மீனாம் கருவிழிகள் விளையாடக் கண்டிடவே
பொன்மணியாள் மலர்க்கூந்தல் மகிழாதோ மணம்வீசி
      வண்டாடும் குழலியவள் குழையாட ஆடினளே.

முன்பனியின் துளிதாங்கி முத்தாக ஒளிர்ந்திடுமே
      மென்னிதழின் வண்ணத்தில் செங்கதிரோன் நாணிடவே
கன்னிமகள் கனவுகளில் மருதாணி சிவப்பழகாய்
      உன்னழகில் நற்காலை காண்டிடவே வருவாயே.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அஞ்சலி

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை
        இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று
திசைமாறிப் போகாமல் திறமை யோடு
        தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்
விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி
 

 » Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா  »

மரபுக் கவிதை

எத்திசையும் முழங்கிடுவோம்

பையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்
நாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று
பையப்பைய நடக்கும் அகழ்வாராய்ச்சியில்
பகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.

குறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்
குரலோசை மொழிபெயர்ப்பில் உலகெங்கும்.

 » Read more about: எத்திசையும் முழங்கிடுவோம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »