மதுவுடைய பிடியினிலே
மயங்குகிற அடிமையே !
எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய் ;

மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்திலே நீயிருப்பாய் ;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை ;

இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும் ;
மதுகுடித்தப் போதையிலே
மயங்குகிறப் பேதையிரே !

சதிசெய்யும் சாத்தானாய்
சந்ததிக்கே ஊறுசெய்யும் ,
மதிமயக்கி உமையழித்து
மானமதைக் கெடுத்துவிடும் .

மதுவரக்கன் கைபிடிக்க
மனமதுவோ அதிலயிக்க ,
பதியாக வாழ்பவரைப்
பாழ்படுத்த வந்ததுவே !

விதிமுடிக்க வருமுன்னே
விழித்துவிடு குடிமகனே !
அதுவுன்னை முடிக்குமுன்னே
அதனைநீ முடித்துவிடு.


Leave a Reply

Your email address will not be published.

Related Posts

புதுக் கவிதை

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை சீதனமாய் பெற்றன்று வெண்ணிறத்தோலுடையான் விட்டுசென்ற பசுமை நீ… பன்னிற மொழியுடையோர் பாரதநிறம் சேர்த்து கண்ணிறச் சக்கரம் சுழன்ற காண்போரின் முத்திரை நீ… மண் நிறக்கடை எல்லை மதிற்ச்சுவர் முன் நின்று பொன்னிற ஒளிதனிலே மின்னிடும் முச்சுடரே… அந்நிய நிறத்தோனிடம் அடிமை நிறம் இல்லையென உன் நிற Read more…

புதுக் கவிதை

அவன் என் மூத்த சகோதரன்

அவனை நான் அக்கா என விளிப்பது அவனுக்கு பிடிக்கும். அவன் என் மூத்த சகோதரன். கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாகிக் கொண்டிருந்தான். படுக்கையில் விலகித்தெரிந்த அவன் கொலுசுக் கால்களை பார்த்துவிட்டு முதன்முதலில் அதிர்ச்சியானவன் நான்தான். சலவை செய்த உணர்ச்சிகளை அடுக்கி வைத்திருக்கும் எங்கள் வீட்டு அலமாரியில் அவனுக்கான பெண்ணுடை இல்லவே Read more…

புதுக் கவிதை

நேற்று பெய்த மழையில்…

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த கவிதை மழை வெவ்வேறு காலங்களில் பெய்தாலும் என் இறந்த காலத்தைத்தான் ஈரமாக்கிவிட்டு போகிறது ஒற்றைக் குடை இருவர் பயணம் அனாதை சாலை சீதளக்காற்று மெல்லிய உரசல் பகல் இரவு புணர் பொழுது சொர்க்கம் பற்றிய சந்(தேகம்) தீர்ந்தது இன்றோடு!