மாடிமனை கட்டி யதில்
வாழ்ந்தவனும் ”நானே”
கோடிபணம் சேர்த் தங்கே
குவித்தவனும் ”நானே”
நாத்திகனாய்க் கதை பேசி
வென்றவனும் ”நானே”
கூத்திகளோ டிரவு பகல்
கொஞ்சியவன் ”நானே”
சொத்து சுகம் சொந்த பந்தம்
என்றிவைகள் தானே
இத்தரையில் சேர்த்து வைத்தேன்
எல்லாமும் வீணே!
மக்கி மடிந் தழிகின்றேன்
மண்ணறைக்குள் நானே
இற்றிறந்து போனேனா
எலும்பேதான் நானா?
இதை விடவும் இதை விடவும்
இன்னும் அழிவேனா?
இதுவரையில் வாழ்ந்ததெது
கனவுலகம் தானா?


1 Comment

நா.கு.இரெத்தினம் - சிட்னி · ஜூன் 3, 2017 at 0 h 59 min

வாழ்த்துக்கள் பாவேந்தர் பாறுாக் அவர்களே…!

1966ம் வருடம் ஆகஸ்ட் மாதம் காரை தீவிலிருந்து வெளிவந்த எனது ”இளைஞன்” மாத இதழில் தங்களது கவிதை ஒன்றும், மருதார் மஜீத் அவர்களது கவிதை ஒன்றும் வெளியிட்டிருந்தேன். தாங்களிருவரும் அன்று முதல் இன்று வரை ஆற்றிவரும் தமிழ் தொண்டிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இணையதள வாயிலாக தங்களிருவரையும் பல வருடங்களின் பின்பு கண்டது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. தொடர்க தங்கள் தமிழ் தொண்டு…!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்