இது நிகழக் காரணமாயிருந்த

இதயங்கள் அனைத்திற்கும்
இக்கதை சமர்ப்பணம்!

ஓர் அறிமுகம் :

“சேலை வானம்”… தலைப்பே பல வியப்புகளையும் குழப்பங்களையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்துதான் இவ்விடம் வந்திருக்கிறது.

“சேலை வானம்”… இது நடந்து முடிந்த வரலாறு மட்டுமல்ல…தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் வற்றாத ஆறு! இது சில நேரங்களில் இனிப்பாகவும் பல நேரங்களில் உவர்ப்பாகவும் ஊற்றெடுக்கிறது.

தலைப்பிலிருந்து புரிந்திருக்கலாம்… இது பெண்மையைப் பேனாவால் பெயர்த்தெடுக்கும் முயற்சி என்று!

“யார் அந்தப் பெண்?”

நாடாளும் அரசியா? நாயகனைத் தேடும் முதிர்கன்னியா? அமுதூட்டும் கைம்பெண்ணா? அல்லது உடல் கிழித்து உயிரெழுதும் விலைமாதுவா? யாருமில்லை!

இவள் ஆங்காங்கே காற்று வீசும் இடமெல்லாம் கன்னத்தையோ கூந்தலையோ உலர்த்திக் கொண்டுதான் இருக்கிறாள். இவளுக்கு வாழ்தல் என்பது மூச்சு விடுவது போல சுலபமாக இருப்பதில்லை. பெரும்பாலும் மூச்சுத்திணறல்தான்!

இவள்… உலகம் உணராத பல சாதனைகளை மாராப்பைச் சரிசெய்வதுபோல் அடிக்கடி செய்து விடுகிறாள்! இவளை எழுதும்போது மட்டும் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் வியப்புக்குறி இட்டுக் கொள்ளலாம். தமிழ் இலக்கணம் தவறு கற்பிக்காது!

“சேலை வானத்தின்” நோக்கம்… இவளின் புன்னகையைக் காட்டிக் கொடுப்பதோ கண்ணீரை மொழிப்பெயர்ப்பதோ மறுபக்கத்தை உருப்பெருக்குவதோ இல்லை. இவளும் இங்குதான் இருக்கிறாள் என்று இறுமாப்புக் கொள்வதே!

இக்கதையில் நிர்வாணங்கள் அதிகம். முகம் சுளிக்காதீர்கள்! வாழ்வின் நிர்வாணம் அடிக்கடி இங்கு துகிலுரித்துக் காட்டப்படும்.பிறந்தக் குழந்தைக்கும் பிதைக்கும் பிணத்திற்கும் இடையில் நிர்வாணம் உங்களுக்கு அறிமுகம் இல்லையென்றால் முகம் சுளித்துக் கொள்ளுங்கள்! தேவைப்பட்டால் முகத்தில் காரி உமிழுங்கள்! முகம் நீட்டி ஏந்திக் கொள்கிறேன்!

அங்குமிங்கும் பெய்த மழைத்துளிகள் உருண்டுத் திரண்டோடி ஆறு, குளம் சேர்வது போல்தான் இக்கதையும்…

“மழை பெய்தது திண்ணம்”

ஆவலோடு வந்த உங்களை அறிமுகத்தோடு அனுப்பி வைக்க மனமில்லை!

இதுவொரு திருநெல்வேலித் திருமதியின் வாழ்க்கை! வாருங்கள்…! வாழ்வோம்…!

– முகில் வேந்தன்

சேலை வானம் – 1

 

நடுராத்திரி… கடிகாரங்கூட ஊளையிட்டுட்டு இருந்துச்சு. கொசு கடிக்கிறது அவளுக்கு ஒணரேயில்ல. வீட்டுக்கா­ ரனுக்கு வாங்கி வச்சிருந்த தூக்க மாத்திரைய கண்ணீர் பொங்க கள புடுங்குறமாரி ஒவ்வொன்னா பிச்சுட்டு இருந்தா வெள்ளத்தாயி…!

 

/விடியும்/

2  3 4


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »