இரவிவர்மா ஓவியமா
இராமன்கதைக் காவியமோ ?
வானவர்க்கும் கிடைக்காத
வந்திருக்கும் திரவியமோ ?

மின்னலுக்கு ஆடைகட்டி
மேதினியில் உதித்ததுவோ ?
கன்னலுக்குத் தேன்பாய்ச்சி
காலிங்குப் பதித்ததுவோ ?

வெடித்திருக்கும் வெள்ளைரோஸ்
விவரிக்கும் பேரழகோ ?
கொடுத்துவைத்த கோமகனும்
குடியமரும் தேரழகோ ?

முல்லைமலர் போலிருக்கும்
மூக்குத்திப் பொன்னழகோ ?
உள்ளமதை வெளிப்படுத்தும்
உயர்வானக் கண்ணழகோ ?

இதழ்பூசும் வண்ணமது
இதயத்தைக் கவர்ந்ததுவோ ?
விதவிதமாய்க் காதணிகள்
விருந்துக்கு வந்தனவோ ?

விழிபேசும் மொழிகேட்டு
வழிகூட மறந்ததுவோ ?
ஒளிவீசும் பார்வையிலே
உயர்காதல் திறந்ததுவோ ?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »