புத்தக மதிப்புரை

நூலின் பெயர் : வீழாதே தோழா

பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள்

நூலாசிரியர் : மனோபாரதி,

manobharathigr@gmail.com

www.facebook.com/manobharathigr
கைப்பேசி : +91 8903476567

 

என்
உயிர்க்கினிய தம்பி
மனோபாரதி,
துடித்தெழும் புலியாக
வெடித்தெழும் நெருப்பாக
கருத்து வித்துகளை
விதைத்திருக்கிறான்!
இது முளைத்தால் மரம்!
இல்லையேல் உரம்!

எதுகை மோனை
ஏர்பூட்டி நடக்க,
நன்செய் வயலில்
நாற்று நடமாடுவதாய்
வளமான கவிதைகளைப்
படைத்திருக்கிறான்!

தடைகளைத் தாண்டி
விடைகளைத் தேடும்
தன்னம்பிக்கை உடையார்க்கு
நன்னம்பிக்கை தரும் கவிதை
நாற்றங்கால் இந்நூல்!

எத்தகையார்க்கும்
அஞ்சாதுஎடுத்துரைக்கும்
துணிவில் பூத்த
முல்லைச்சரமா?
இல்லை கவிதைச்சரம்
இந்நூல்!

சமுதாயத்தில்
மண்டிக்கிடக்கும்
சாதி மத
மோதல்களைத் தாண்டி
மனித நேயத்தை
மானுடத்தில் விளைக்கும்
நாளைய அறுவடை
இந்நூல்!

துவண்டு கிடப்பவனையும்
தூங்கிக் கிடப்பவனையும்
உசுப்பி விடும்
முயற்சியின் முழுவீச்சே
இந்நூல்!
மூச்சுவிட மறந்தவனும்
முயற்சி செய்ய மறந்தவனும்
வாழ முடியுமா?

முடியாது என்பதை
முற்றும் உணர்த்தும் நூல்!
“நூறு நூலகம் தோற்கிறது,
ஓர் சிறைச்சாலை
திறக்கையிலே” என்ற
கவிதை வரியே
தீப்பொறியாய்
தெறிக்கிறது!

”நேற்றைய நினைவொடு
நினைவொடுக்காதே
நேற்றினும் இன்று நீ
நெடிது வளர்ந்துள்ளாய்”
என்று அடுக்கிக் கொண்டே
அறிவுரை பகரும்
விடுதலைப் பாவலரேறு
ஐயா பெருஞ்சித்திரனாரின்
‘வாழ்வியல் முப்பது’
என்னும் நூலைப் போல்
அறிவு தரும் அருவியாக
செறிவான சிந்தனைச்
சிதறலாக கவிதைகள்
கனலைக் கக்குகிறது!

என் பாட்டன் திருவள்ளுவர்
“உள்ளம் உடைமை
உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கி விடும்” என்கிறார்.
ஊக்கம் உடைமையே
உடைமையாகக் கருதப்படும்.
பொருளுடைமை நிலைபெற்று
நிற்காமல் நீங்கிவிடும்
என்ற உண்மையை உணர்த்துகிறார்.
அந்த ஆற்றல் மறவர்
அருந்தவ ஆசான்
திருவள்ளுவரின் பெயரக்குழந்தையாய்
தம்பி மனோபாரதி
இளைஞர்க்கும், மாணவர்க்கும்
மட்டுமா? அனைவருக்கும்
தன்னம்பிக்கை ஊட்டும்
கவிதைகளைத் தந்திருக்கிறான்.
இவனது முயற்சி தொடரட்டும்! தமிழின
மக்களைத் தட்டி எழுப்பட்டும்!
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,
தமிழர் உலகை! அதற்கு ஒன்றாக நாம் தமிழராய்ப்
படை எடுப்போம்!
வெல்க தம்பி!

சீமான்,

நாம் தமிழர்

 

வெளியீடு :

காகிதம் பதிப்பகம்
(மாற்றுத்திறனாளிகள் நடத்துகிற பதிப்பகம்)

முகவரி :

13-B, Type-2 Quarters, Block-4,
Neyveli – 607801 CuddaloreDist,
TAMIL NADU, INDIA.

kaakitham@gmail.com,

www.facebook.com / kaakitham

கைப்பேசி/வாட்ஸப் : +91 8903476567

பக்கங்கள் : 120

ISBN : 978-93-81134-46-7

விலை : ரூ.50/- (INR)


நூலின் சில வரிகள்…

உன்னை அறியாமல்
விண்ணை அளந்திடுவாய்…
நீ கனவு காணும் போது
விழித்திருந்தால்!

உளி  உடைத்த
பாறை தான்,
கற்சிலை ஆகுமே!
விழி படைத்த
நீரைக் கண்டு,
தற்கொலை எண்ணம் ஏனடா?

எழிலாய்ப் பூத்த
திறமையால் தனித்திரு! – அதை
தொழிலாய் மாற்ற
சில உத்திகள் கணித்திடு!

தவறைத் திருத்தி
எழுச்சி சுவரை எழுப்பு!
கண்ணீர் வடிக்கையிலே…
நீ இறங்கு,
சுய நடவடிக்கையிலே!

கறை உள்ள  பிறையும்
கவி காணூதே!
குறை உள்ள தேகமும்
கரை காணுதே!
சிறை கண்ட பறவையும்
சிறகு வளர்க்குதே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

Moon inside the well

ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க,

 » Read more about: Moon inside the well  »

நூல்கள் அறிமுகம்

இலங்கையில் சிங்களவர்

இலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்?

 » Read more about: இலங்கையில் சிங்களவர்  »

நூல்கள் அறிமுகம்

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.

 » Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம்  »