அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !

தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி, தன் துணையின்
தேவைகளைக் கவனிப்பாள் !

சிக்கென்று உடை அணிந்து
சிங்காரமாய் சிகைத் திருத்தி
சில்லென்ற குளிர் வெளியில்
சீக்கிரமாய்ப் பணிக்குச் செல்வாள் !

ஆடவர் பலருக்கு நிகராக
அயராது உழைப்பைத் தருவாள் !
ஆதாயம் தான் பார்க்காமல்
ஆனந்தமாய் அவள் உழைப்பாள் !

வீடு வந்து சேர்ந்ததுமே
வீட்டுப் பணியில் மூழ்கிடுவாள் !
விளையாடும் தன் குழந்தைக்கு
விருப்புடனே அவள் தாயாவாள் !

நாள் கணக்காய் தேய்ந்தவளும்
தோழியின் பிறந்தநாள் சிறப்பிற்கு
சென்றுவர விரும்பி கணவனிடம்,
நம்பிக்கையுடன் கேட்டாளவள் !

பெண்ணாக வீட்டில் இருப்பதுதான்
பெண்ணுக்கு அழகு என்றான் !
பெண்மைக்கிது உதவாதோ வென்று
அன்னவளும் முடங்கியே இருந்திட்டாள் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

இயலாமையின் ஓளி

இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…

நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…

வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…

 » Read more about: இயலாமையின் ஓளி  »

புதுக் கவிதை

வேண்டும் சுதந்திரம்

மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி
மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்!
சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு
சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்!

அணைக்கட்டுப் பிரச்சினையின்றி
ஆதரவாக வேண்டும் சுதந்திரம்!
வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம்
வென்றிட வேண்டும் சுதந்திரம்!

 » Read more about: வேண்டும் சுதந்திரம்  »

புதுக் கவிதை

பாரியன்பன் கவிதைகள்

 • விழி கொண்டு
  மலரும் காதல்
  மொழி கொண்டு
  நகரும் கவிதை.
 • மறந்திடாமல்
  சொல்ல நினைத்த
  கவிதையொன்று
  தொலைந்து போனது.
 » Read more about: பாரியன்பன் கவிதைகள்  »