நல்லவன்

நல்லவன்

குமரேசனைக் கண்டாலே பிடிக்காது யசோதாவுக்கு. எப்படிப் பார்த்தாலும் ரெட்டை அர்த்த சினிமா பாடல்களையே முணுமுணுத்துக்கொண்டிருப்பான்.

“மெதுவா மெதுவா தொடலாமா? உன் மேனியிலே என் கை படலாமா?” என்று பாடுவான்.

“பளார்’ என ஓங்கி அறை விடலாமா?” என பதிலுக்குப் பாடத் தோன்றும். ஆனால், அடக்கிக் கொள்வாள்.

நிர்வாகி கூப்பிட்டார் என்று வேகமாக நடந்தால், “மெல்லப்போ, மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ…” என்று பாடுவான்.

பொறுக்கி.

அந்த அலுவலகத்திலே அவளுக்குப் பிழத்த ஒரே ஆள் வேலுச்சாமிதான். அவர் மீது மிகுந்த மதிப்பும், பரியாதையும் வைத்திருந்தாள். வெற்றிலைப் போட்ட வாயும், விபூதி பூசிய நெற்றியும், தான் உண்டு, தன் வேலை உண்டு என்கிற அவருடைய கொள்கையும் யசோதாவுக்கு நிரம்பப் பிடித்துப்போயிற்று.

அவரிடம் இந்தக் குமரேசனைப் பற்றி சொல்லி வைத்தால் என்ன? என்று தோன்றியது. வேண்டாம். தன்னைப் பற்றி தவறான தகவல்கள் அலுவலகம் முழுக்கப் பரவிவிடும். அடக்கி வாசிப்போம் என அமைதியானாள்.

அன்று மாலை.

“யசோதா… இன்னைக்கு ஏகப்பட்டவேலை. முக்கியமான கோப்பு ஒன்னை முடிக்கச்சொல்லியிருக்கார் நிர்வாகி. நீ எனக்குக்கொஞ்சம் உதவ வேண்டிவரும்.” என்றார் வேலுச்சாமி.

“ஓ.. அதனாலென்ன ஐயா? இருந்து முடிச்சிட்டுப்போறேன்.” என்றாள்.

எல்லோரும் வெளியேறி அலுவலகம் வெறிச்சோடியபோது மெல்ல வந்த வேலுச்சாமி கதவைத் தாழிட்டார்.

திடுக்கிட்டாள் யசோதா.

“ஐ…யா… என்ன இது? ஏன் கதவை அடைக்கறீங்க..?”

“ஒரு முக்கியமான விசயம் பத்திப் பேசணும். அதுக்காகத்தான்.”

“எ.. ன்ன அது?”

“நீ மட்டும் என் ஆசைக்கு இண்கிட்டா உனக்குப் பதவி உயர்வு வாங்கித் தாரேன்.” என்று சொல்லிக்கொண்டே அவளை நோக்கி முன்னேறினார். அவர் விழிகளில் வெறி தாண்டவமாடியது.

அப்போது –

கதவு பலமாகத் தட்டப்பட, வெலவெலுத்துப்போன வேலுச்சாமி கதவைத் திறந்தார்.

வெளியே – நிர்வாகி !

அவருடன் குமரேசன் !!

“வேலுச்சாமி… நீங்களா இப்படி? த்தூ… அசிங்கமாய் இல்லே? குமரேசன் உங்களைப் பத்திச் சொன்னப் போதெல்லாம் நான் நம்பலை. இப்ப கையும் களவுமா பிடிச்ச பிறகுதான் விளங்குது. உங்களை உடனேவேலையை விட்டு நீக்கறேன்.” என்றார் நிர்வாகி.

வியர்த்துவிட்டார் வேலுச்சாமி.

யசோதாவுக்கு மலைப்பாக இருந்தது.

மறு நாள்.

அலுவலகம் முட்ந்து வீட்டுக்குக் கிளம்பிக்கொண்ழருந்தாள் யசோதா.

“சம்மதமா..? சம்மதமா..? நானும் கூட வர சம்மதமா..?” வழக்கம்போல் அவளைப் பார்த்துப் பாடினான் குமரேசன்.

“வாங்களேன்..” என்றாள் யசோதா நாணத்துடன்.

Leave a Reply

Your email address will not be published.