13

 

நீருக்கடியில் அந்த இரசமணி என்னை புரிந்து கொள்ள ஆள் உண்டா என்பது போல் கிடந்தது.

”பாத்தீங்களா பாலையே அதில் இருக்க தண்ணிய மட்டும் தனியா பிரிச்சிறுச்சி”

”இந்த குண்டுக்கு அவ்வளவு பவரா சாமி” ரவி கேட்டான்.

”குண்டா இது என்ன அணுகுண்டா”

”சாரி சாமி எனக்கு தெரிஞ்சத கேட்டேன்”.

”ம்ம் பரவால்ல இது குண்டு இல்லை. ஆனா இந்த சின்ன மணி பத்து வெடிகுண்டுக்கு சமம்”.

”சாமி என்ன சொல்றீங்க?”

”எல்லா விஷயத்திலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டுன்னு சொல்றேன்”.

”எப்படின்னு கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க சாமி”.

”இப்போ அதுக்கான நேரம் இல்லை. நேரம் வரும் போது எல்லாம் தானா தெரியும். ஆனா ஒன்னு இந்த மணி கொஞ்சநாளைக்கு இந்த பொண்ணுகிட்ட இருக்கட்டும் என்ன சரண் சொல்ற…”

”சாமி இதுல நான் சொலறதுக்கு என்ன இருக்கு நீங்க சொன்னா சரி சாமி”.

”கொஞ்சம் திருநீறு கெடைக்குமா?”

”இந்தாங்க சாமி!”

ஒரு பேப்பர் எடுத்து அதில் திருநீறை கொட்டி நடுநயமாக அந்த மணியை வைத்து மூடினார்.

”இந்தாங்கப்பா இந்த பொட்டலத்தை இங்க வைக்கிறேன் யாராவது இதை முடிஞ்சா நெருப்புல எரிச்சி காட்டுங்க பாக்கலாம்”.

முதல் ஆளாய் ரவி வந்தான் லைட்டரை வைத்து க்ளிக்கிக்கொண்டே இருந்தான் அவனால் ஒன்னும் முடியலை.

இந்த முறை பாரதி உசாறாய் கொஞ்சம் அந்த பொட்டலத்தில் மண்ணென்னெய் ஊற்றினாள்.

பக் என பிடித்துக்கொண்டு எரிந்தது. அனைவரும் சாமியை பார்த்தார்கள் சிரித்தார்கள். ”என்ன சாமி ஒங்க மணி பீஸ் போச்சா” ரவிதான் கேட்டான்.

”கொஞ்சம் பொறுப்பா…”

”என்னத்த பொருக்கறது எப்படி எரியுது பாத்தீங்களா?”

”என்ன எரியுது”

”ஒங்க மணி சாமி”.

”அழிவில்லாத ஒன்ன எப்படிப்பா அழிப்பீங்க அங்க பாருங்க”.

அந்த இரசமணி வைத்தது போலவே இருந்தது.

பார்த்தவர்களுக்கு பகீர் என்றது.

”என்ன இதுக்கே இப்படி ஆய்ட்டீங்க? இன்னும் இருக்கு காட்டறேன் பாருங்க”.

”அம்மா சாந்தா இரண்டு முடிகள் பிச்சி குடும்மா” என்றார். அவளும் பிய்த்து தந்தாள்.

இரண்டு முடிகளையும் தனியே பிரித்தார். ஒன்றை தனியாகவும் ஒன்றை அந்த மணி மீதும் கட்டினார்.

”இது இரண்டும் முடிதானே? இதில் நெருப்பு வைங்க பாக்கலாம்! ஆனா இப்போது மணி மீது நெருப்பு வைக்கும் போது உடனே நெருப்பை நகர்த்தனும் இல்லை என்றால் மணி உருகிவிடும்”.

”அப்போ நெருப்பு இதன் எதிரியா?”

”அப்படி இல்லை இந்த மணியை கட்டும் விதம் பல உண்டு. அதில் நெருப்பால் கட்டும் விதமும் உண்டு. அதனால் நெருப்பு பகை அல்ல நேரடி சூட்டிற்கு உருகிவிடும் அவ்வளவுதான்”.

”சரி நான் முயற்சிக்கிறேன்”. இந்த முறையும் ரவியே முன் வந்தான். முதலில் தனியே இருந்த முடியில் தீ வைத்தான். இல்லை அந்த தீயின் சூடு பட்டதுமே அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அடுத்து மணியோடு கட்டிய முடியில் தீ வைத்தான். ஒன்றும் ஆகவில்லை. சரியா வைக்கலையோ மறுபடியும் வைத்தான் ஆச்சர்யப்பட்டான். அந்த மணியில் கட்டிய முடி அப்படியே இருந்தது.

”சாமி இதுலாம் எப்படி சாமி?”

இதுக்கே ஆச்சர்யப்பட்டால் எப்படிப்பா? இதுலாம் சாதாரனம். இன்னும் எவ்வளவோ. இந்த சின்ன இரசமணி செய்யப்போகிறது. நீங்களும் பாக்கத்தானே போகிறீர்கள்”.

”சரிங்க சாமி எனக்கொரு சந்தேகம் கேக்கட்டுமா?”

”கேளுப்பா!”

”சித்தர்கள் யாருக்கும் உதவியோ யாரிடமும் அன்போ காட்டக்கூடாது. அதனால் அவங்க பவர் கொறஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா நீங்க எங்ககிட்ட அன்பா இருக்கீங்க எல்லாருக்கும் உதவறீங்கலே எப்படி?”

”கொஞ்சம் தப்பான கருத்து. ஆனா உண்மையும் அதான். ஆனா நான் சித்தன் இல்லப்பா நான் சாதாரனமானவன் அதனாலதான் நான் அன்பா இருக்கேன்”.

”சரிங்க சாமி இந்த ஊருல எவ்வளவோ பேர் இருக்காங்கலே அவங்களாம் விட்டு எங்களுக்கு மட்டும் ஒங்க அன்பும் உதவியும் செய்யறீங்கலே ஏன்?”

”உங்களுக்காகவா யார் அப்படிச்சொன்னது?”

”நீங்க எங்களை மட்டும் தானே சுத்தி சுத்தி வர்றீங்க. அப்போ எங்களுக்காகத்தானே…”

”இல்லை நான் உங்களை சுற்ற வில்லை. சரணைத்தான் சுற்றுகிறேன்”.

”என்ன சரணையா…”

 

சித்தர்க்காடு

 

”ஏய் ராஜா இங்க வா!”

”என்ன சாமி மரியாதை இல்லாம பேசறீங்க?”

”ஏய் வாப்பா கோவப்படாதா!”

”சரி சொல்லுங்க.”

”அந்த ரங்கநாதன் ஒடம்பு நந்தவனம் காட்டுப்பகுதியில கெடக்கு போய் தூக்கிட்டு வா”.

”என்ன சாமி சொல்றீங்க?”

”அங்க போய் பாரு தெரியும்”.

”எப்படி சாமி?”

”ஆசை யாரை விட்டது.”

”அப்படின்னா?”

”நான் சும்மா சொன்ன அந்த கதைய கேட்டு அவசரப்பட்டான்”.

”அப்போ சித்தர்கள் இல்லையா அவன் பாத்தது பொய்யா?”

”அவன் என்னத்தப்பாத்தானோ தெரியலை. ஆனா அவங்கதான் சித்தர்கள். நீ அங்க பாத்ததுதான் சாமின்னு சொன்னதும் சித்தர்களை பார்க்கற ஆசைல அவசரப்பட்டான். நானே இன்னும் சித்தர் தரிசனம் முழுசா பாக்கலை. இவன் பதினெட்டுப்பேரை பாத்தானாம். சிவலிங்கம் இருந்துச்சாம்.  என்னமா என்கிட்டயே கதை சொன்னான். பாத்தில அதான் பதிலுக்கு நான் ஒரு கதை விட்டேன்…”

”சாமி அவன் ஒங்க பேரன் சாமி”.

”ஹாஹாஹா… யாருக்கு யார் பேரன்? அவனை என் வழிக்கு கொண்டுவர என்னப்பண்ணலானு பார்த்தேன். அவன் தாத்தா ஒருத்தன் ஓடிப்போய்ட்டானு கேள்விப்பட்டேன். அந்த ஆளு எப்படி இருப்பான்னு பார்த்தேன் அந்த ஆளு உருவத்தை காட்டினேன் மயங்கிட்டான்”.

”அப்போ ஒங்க உண்மையான உருவம் எப்படி இருக்கும்?”

”அது மண்ணுக்குள் மக்கி மண்ணாவே போய் இருக்கும்”.

”சரி இப்போ அவன் உயிரில்லா ஒடம்ப வச்சிட்டு என்னப்பண்ண போறிங்க?”

”வயசாயிட்ட இந்த உடம்பை விட்டு, இளமையான அந்த ரங்கநாதன் ஒடம்புக்குள்ள நான் போய்ட்டா, இவன் ஒடம்பு வயதாகும் வரைக்கும் நான் இளமையாவே இருக்கலாம்”.

”சரி அதுக்கு என்ன பண்ணப்போறிங்க சாமி?”

”கூடுவிட்டு கூடுபாயப்போறேன்”.

”கூடு விட்டா……”

 

தொடரும்…

பகுதி-12


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »