12

சித்தர்க்காடு

“என்னடா மச்சி மரம் பேசுது? மரங்கரதே ஒரு உணர்ச்சி இல்லாததுன்னு சொல்லுவாங்க. இங்க என்னடான்னா மரமே பேசுது!”

“பேசுனது மட்டுமா ? அந்த மரம் நடந்துச்சே டா… எப்படி டா ஒரு மரத்தால பேசவும் நடக்கவும் முடியும்? கதைல கூட இப்படிலாம் நடக்காதுடா…”

“தாத்தா அந்த மரத்துக்கிட்ட ரொம்ப நேரமா என்னமோ பேசிட்டு இருந்தாரே என்னவா இருக்கும் ?”

“நானும் உங்கூடத்தான இருந்தேன். எனக்கு எப்படித் தெரியும் ?”

“தாத்தா வந்தா அவரிடமே கேக்கலாம்!”

“டேய் மச்சி அதுலாம் இருக்கட்டும். மொதல்ல இந்த மலைல தங்கம் எங்க இருக்குன்னு கண்டு புடிக்கனுன்டா.”

“டேய் இன்னைக்கு இந்த மலைல நான் ஒன்னு பாத்தேன்டா. ஒரு கொளம் அதுல நெறையா தண்ணி இருக்கு. ஆனா அதுக்குள்ள எவ்வளவு நேரம் இருந்தாலும் மூச்சே முட்டறது இல்லடா!”

“ஒழறாதடா. இந்த மலைல ஓடை மட்டும் தான இருக்கு கொளம் எங்கடா இருக்கு?”

“சத்தியமாடா நான் அதுக்குள்ள தவறி விழுந்துட்டேன். அப்போதான் எனக்கே அது தெரிஞ்சது அது மட்டும் இல்லடா. அதுக்குள்ள நெறையா சாமியாருங்க இருந்தாங்க. ஒரு சிவ லிங்கமும் இருந்துச்சி.”

“அப்படியா! எங்க பார்த்த?” கேட்டுக்கொண்டே வந்தார் வெங்கடாஜலம்.

“தெரியலை தாத்தா. ஒரு யானை தொரத்திச்சா… கால் தவறி மலைல இருந்து அந்த கொளத்துலதான் விழுந்தேன்.”

“மடையா… மடையா…”

“ஏன் தாத்தா திட்டுறீங்க?”

“திட்டாம கொஞ்சுவாங்கலா? நீ பாத்தியே சாமியாருங்க. அவங்க சாமியாருங்க இல்லை. அவங்கதான் பதினெட்டு சித்தர்கள். நீ பாத்தியே லிங்கம்  அது நவபாஷான லிங்கம். அந்த கொளத்துல இருந்து ஒரு முழுங்கு தண்ணி குடிச்சாலே போதும் இன்னைக்கு இருக்க மாரியே என்னைக்கும் இளமையாவே இருக்கலாம் விட்டுட்டியேடா!”

“நான் பாத்தது சித்தர்களையா?”

“ஆமா!”

“அது பாஷானலிங்கமா?”

“ஆமாடா!”

“இருங்க தாத்தா வரேன்” சொல்லிவிட்டு மீண்டும் அந்த யானை இருந்த மலைக்கு வந்தான்.

‘இங்க இருந்துதான விழுந்தோம். மறுபடியும் விழுந்து பாக்கலாம். அந்த சித்தர்களையும் லிங்கத்தையும் விடக்கூடாது’ தனக்குத்தானே பேசிவிட்டு விழுந்தான்.

விழுந்த வேகத்தில் உடல் சிதறிபோனது ரங்கநாதனுக்கு.

இறந்து விட்டான்.

‘ஹாஹாஹா’

யாரோ ஒருவர் சிரித்தார்.

வீரியமான விஷம். அதை சாப்பிட்ட அடுத்த நொடியே, அதன் வேளையை தொடங்கி விடும். ஆனால், சாப்பிட்டு அறைமணி நேரம் ஆச்சி. இன்னும் ஒன்னும் ஆகலையே? என்ன ஆச்சி? சாந்தாதான் இப்படி யோசித்துக்கொண்டிருந்தாள்.

அவள் ஒரு கையில், நான் இருக்கும் வரை உன்னை சாக விட மாட்டேன் என்பது போல் அந்த இரசமணி அவளுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியவில்லை. அவளுக்கு மட்டுமா யாருக்குமே தெரியலை.

‘சரண் இந்த மணியைத்தானே தேடினான். போய் அவன்கிட்ட குடுத்துட்டு, இன்னும் நல்லா வீரியமான மருந்தா ஒன்னு வாங்கிட்டு வரலாம்’ சாந்தா தனக்குத்தானே பேசிக்கொண்டு கிளம்பினாள். அவளை ஒட்டி ஒரு கார் நின்றது.

“ஏய் எவன்டா அது மேல ஒரசிக்கிட்டு காரை நிருத்தறது?”

“ஏய் நான் தாபா.”

“டேய் ரவி எப்படா ஊர்ல இருந்து வந்த நல்லாருக்கியாடா?”

“நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் உனக்கு அந்த ரவுடித்தனம் போகவே இல்லையா?”

“அதுலாம் கூடவே பொறந்ததுடா அவ்வளவு சீக்கிரம் போவாது.”

“சரி எங்க கெளம்பிட்ட ?”

“நம்ம தோஸ்த் வீட்டுக்குத்தான்.”

“நானும் அங்கதான் போறேன் வா கார்ல ஏறு.”

“ம்ம்… இரு அந்த பக்கம் வரேன்.”

அந்த கார் நேராக சரண் வீட்டு வாசலில் தான் நின்றது. முதல் ஆளாய் பாரதிதான் எட்டிப்பார்த்தாள்.

“டேய் அங்க பாருடா உன் எதிர்காலம் எட்டிப்பாக்குது!”

“ஏய் சும்மா இருடி.”

“போடா.

“அக்கா வாக்கா.”

“ஏய் என்னமோ என்ன புதுசா பாக்குறமாரி வாக்கான்னு கூப்பிடற ? காலைலத்தான பாத்தோம் இந்த வாக்கா எனக்கா இல்ல ரவிக்கா?”

“ச்சீ போக்கா… அவள் வெட்க்கப்பட்டுக்கொண்டே ஓடி விட்டாள்.”

“சரி ரவி நீ பேசிட்டு இரு. நான் பக்கத்துல மருந்து கடை வரைக்கும் போய்ட்டு வந்திடரேன்.”

“எதுக்கு. மறுபடியும் சாகறதுக்கு மருந்து வாங்கனுமா?” புதிதாய் ஒரு குரல் வேறு யாரு கோவணச்சாமி தான்.

“சாமி நீங்களா நீங்க எப்படி இங்க?”

“இதாம்பா என் ஊரு. நான் இங்க இல்லாம எங்க போகட்டும்?”

“சரி சாமி. ஏதோ விஷம்னு சொன்னீங்க?”

“அதோ அந்த பொண்ணு கைல ஒரு மணி இருக்கு அதை குடுக்கச்சொல்!”

“இது சரணோடது.”

“என்கிட்டதான் இருக்குன்னா அவன் ஒன்னும் சொல்ல மாட்டான். நீ மொதல்ல கொடு.”

அவளும் தந்தாள்.

“பாரதி ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டா.”

“அவளும் கொண்டு வந்தாள்.”

அந்த டம்ளர் நீருக்குள் அந்த இரசமணி போடப்பட்டது. போட்ட அடுத்த நொடி அந்த நமணி நீல நிறிமாக எதையோ கொட்டியது.

சாந்தா தான் கேட்டாள் “என்னசாமி அது?”

“அதுதான்பா நீ சாப்பிட்ட விஷம்.”

அப்பொழுதுதான் சாந்தாவுக்கும் புரிந்தது. தான் ஏன் சாகவில்லை என்று அந்த விஷம் கலந்த பாலில் விழுந்த மணி அதில் இருந்த விஷத்தை மட்டும் தனியே எடுத்து விட்டது. அன்று ஈசன் விஷம் உண்டு தேவர்களை காத்தான் இன்று இந்த இரசமணி விஷம் உண்டு சாந்தாவை காத்திருக்கிறது.

“ஏய் ஒனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஆயிரம் பேருக்கு தன்னம்பிக்கை சொல்ற நீயா இப்படி பண்ண?”

“அதான். அதான் ரவி; அந்த திமிருதான் என்னை இப்படி ஆக்கிருச்சி. சரண் எவ்வளவோ சொன்னான் நான்தான் கேக்கலை. எல்லாருக்கும் நாம புத்தி சொல்றம் நமக்கே ஒருத்தன் புத்தி சொல்றானான்னு எம்மனசு கேக்கலை. அதனால வந்த வினை நான் இப்போ கர்ப்பமா இருக்கேன்டா. கல்யாணம் ஆகாம அதும் நான் இப்படி நொண்டிகிட்டு இருக்கும் போதே இப்படின்னா இந்த ஊரு காரி துப்பாதா?”

“அதனால சாவறதுதான் முடிவா பைத்தியக்காரி பைத்தியக்காரி.”

“வேறென்ன பண்ண சொல்ற கால இழுத்துக்கிட்டு, வயித்த தள்ளிக்கிட்டு இருக்க சொல்றியா?”

“இந்த தெளிவு எவன்கூடவோ படுக்கறதுக்கு முன்னாடி வந்திருக்கனும். சாரி சாந்தா.”

“போடா இந்த ஊரு பேசாததாடா நீ பேசிட்ட. அதான்டா யாருக்கும் பாரமா இல்லாம செத்துறலான்னு முடிவு பண்ணிட்டேன்.”

“இதுக்கு யார் காரணம்?”

“உன் மச்சான் தான்டா ரவி.” ஊருக்கு அழைப்பு குடுத்து விட்டு வந்த சரண்தான் பேசினான்.

“யாருடா. சரண் அந்த ராஜாவா?”

“அவனேதான்.”

“அவன்கிட்ட எப்படிடா? எல்லா விஷயத்தையும் நல்லா யோசிச்சி பண்றவ, இந்த விஷயத்துல எப்படிடா ஏமாந்தா?”

“அவளோட ஆணவமே அவளை ஏமாத்திருச்சிடா. நான் எவ்வளவோ சொன்னேன். இவ கேக்கலை. இதுல இன்னொன்னு என்ன தெரியுமா? அவனுக்கு நம்ம பாரதிமேலயும் ஒரு கண்ணுடா.”

“என்னடா சொல்ற?”

“ஆமான்டா. அதான் மாமா அவனை வீட்டை விட்டு தொறத்திட்டாரு. இப்போ சித்தர்க்காட்டு பக்கம் சுத்திட்டு இருக்கான்.”

“நான் கொஞ்சம் பேசலாமா ? நான் ஒருத்தன் இருக்கறதையே மறந்துட்டீங்களா?”

“சாமி சொல்லுங்க சாமி.”

“அவன் இப்போ சித்தர்காட்டுல இருக்கறதுதான் அவனுக்கு நல்லது. இந்த பொண்ணுகிட்ட இந்த இரசமணி இருக்கறதுதான் இந்த பொண்ணுக்கு நல்லது. இந்த மணியை நீயே வச்சிக்க. இதன் சக்தி உனக்கு ஒரு நல்ல வாழ்வை தரும். அம்மா பாரதி கொஞ்சம் பால் இருந்தா குடும்மா.”

மீண்டும் ஒரு பால் டம்ளர். அதில் அந்த இரசமணியை கோவணச்சாமி போட்டார். சிறிது நேரத்தில் பால் வெண்ணெய் போல் கெட்டியாகி விட்டது கீழ் தேங்கிய நீருக்குள் அந்த இரசமணி.

 

தொடரும் …

பகுதி 11


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »