வாய்மை வெல்லும் எனச்சொல்லி
….. வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
….. தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
….. துணிவாய் உன்னை நிற்கவைத்தார்!
வாயைத் திறக்க வழியில்லை
….. வாய்..மெய் பேசும் நிலையில்லை!
.
பெண்மை என்றும் மென்மையெனப்
….. பெருமை பேசி சிலைவடித்தே
வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே
….. வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!
உண்மை, நன்மை, தீமைகளை
….. உணர்ந்து பயந்தி டுவாயென்று
கண்ணைக் கறுப்புத் துணியிட்டுக்
….. கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!
.
குருடன் கண்ட யானைபோலோ
….. குறுக்குப் பேச்சைக் கேட்டுநின்றாய்!
உருவில் உணர்த்தும் உண்மைகளை
….. ஒளித்து வைக்க முடியாது!
திருட்டுப் பார்வை காட்டிவிடும்!
….. தீர்ப்பைச் சரியாய்ச் சொல்வதற்குக்
கருட பார்வை வேண்டுமென்றால்
….. கண்ணைத் திறந்து நாலும்பார்!
.
பெண்ணே ! உன்கண் கட்டியதால்
….. பேச்சை மட்டும் கேட்டுநின்றாய்!
மண்ணை இழந்து கலங்குபவர்
….. மானம் இழந்த பேதையர்கள்
உண்மை மறைத்து நடிப்பவர்கள்
….. உன்றன் கண்ணால் அறிந்திடவே
கண்ணைக் கட்டி வைத்திருக்கும்
….. கறுப்புத் துணியைக் கழற்றிஎறி!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு 
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!

ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !

 » Read more about: கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!  »

மரபுக் கவிதை

வாழவைக்கும் காற்றாய் வாவா

எதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய்
        எல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய்
பதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று
        பாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள
மதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க
 

 » Read more about: வாழவைக்கும் காற்றாய் வாவா  »

மரபுக் கவிதை

நதிக்கரை ஞாபகங்கள்

மழை பெய்த மலைகளிலே
        மறுகி ஓடும் நீரோடை;
குறுகிய தோர் காட்டாறு
        கூடி வீழும் அருவிகளும்;
அடித்து வந்த மூலிகையின்
 

 » Read more about: நதிக்கரை ஞாபகங்கள்  »