11

சித்தர்க்காடு

அந்த மரத்திற்கு பின்னாடி ஒளிந்து கொண்டு ப்ரம்மச்சித்தர் எந்தப்பக்கம் வரப்போகிறார் என்று இருவரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த வேலையில் “என்ன வெங்கடாஜலம் நல்லாருக்கியா”ன்னு ஒரு குரல் அந்த மரத்தின் பின்னால் இருந்த இருவரும் மெல்லப்பின் வாங்கினார்கள் காரணம் அந்த மரம்தான் பேசியது.

“என்னப்பா நல்லாருக்கியா?”

“இருக்கேன் சாமி!”

“அப்புறம் என்ன இந்த பக்கம்?”

“சித்தர்ராஜான்னு ஒரு சாமியோட சமாதிய தேடி வந்தேன் சாமி!”

“கண்டுப்பிடிச்சிட்டியா?”

“இன்னும் இல்லை சாமி!”

“இந்த மலைலதான் அந்த சித்தர் சமாதி இருக்குன்னு ஒனக்கு யாருப்பா சொன்னது?”

“அந்த சித்தர்ராஜா எழுதிய ஓலைச்சுவடிகள் எனக்கு கிடைச்சதுசாமி. அதுலதான் அந்த குறிப்பு இருந்தது.”

“அவர் எழுதிய சுவடி மட்டும் இல்லை வெங்கடாஜலம் அந்த சித்தர்ராஜாவே இந்த பிறவியில் பிறந்து வளர்ந்து இப்போ உங்கிட்டயே இருக்காரே அவரிடமே கேக்கலாமே…”

“என்ன சொல்றீங்க சாமி சித்தர்ராஜா எங்கூட இருக்காரா யார் சாமி அது?”

“அதோ அந்த ராஜாதான்!” சொல்லிவிட்டு அந்த மரம் நகர்ந்து சென்றது. பேசும் மரத்தை பார்த்தே பயந்து போன இருவரும் இந்த காட்ச்சியைப்பார்த்ததும் அங்கிருந்து சிட்டாய் பறந்தார்கள்.

“என்ன அந்த ராஜாவா சித்தர்ராஜா”

“ஆமா வெங்கடாஜலம். அது மட்டும் இல்லை அந்த ரங்கநாதன் கூட போன பிறவியில் இந்த சித்தர்க்காட்டுல சித்தர் தரிசனம் கிடைக்கும் வரை எழ மாட்டேன் என்று அமர்ந்த நிலையிலே ஜீவ சமாதி ஆனவன்தான். அந்த ரங்கநாதன் அதன் பயனாக இன்று அவனுக்கு பதினெட்டு சித்தர் தரிசனமும் கிடைச்சது. ஆனா அவன் சரியா பயன் படுத்திக்கொள்ளவில்லை.”

“சாமி ரங்கநாதன் சித்தரா?”

“ரங்கநாதனும் சித்தர் இல்லை. அந்த ராஜாவும் சித்தர் இல்லை.”

“பேர் மட்டும்தான் சித்தர்ராஜா. அந்த பேரை வச்சிக்கிட்ட இந்த மலையில அவன் பண்ணாத அட்டூழியம் கொஞ்சமல்ல. அப்போ மட்டும் இல்லை. இப்போ இந்தப்பிறவியிலும் அந்த ராஜா அப்படித்தான் இருக்கிறான். அவன் செய்த தவறினால் ஒரு தாயும் சேயும் சாகப்போறாங்க.”

“யார் சாமி அது?”

“சாந்தா!”

“அந்த பொண்ணா அது பாவம் சாமி.”

“ஒனக்கே அது பாவம்னு தெரியுது. ஆனா அந்த ராஜாவுக்கு தெரியலையே.”

“அந்த சரண்தான் இந்த பொண்ணுக்கூடவே இருப்பானே. அவன் இருந்துமா சாமி இப்படி ஆச்சி.”

“ஒரு நல்ல நண்பனா அந்த சரண் அந்த பொண்ணுகிட்ட எவ்வலவோ சொல்லிப்பார்த்தான். அது கேக்கலை இந்த ராஜாவோட வேசமெல்லாம் பாசம்ன்னு நம்பி மோசம் போச்சி.”

“..ச்சே இப்படியுமா சாமி ஒருத்தன் இருப்பான். நான் நல்லவன் இல்லதான் இரசவாதம் கத்துக்கனுமுன்னு நான் பண்ணாத பித்தலாட்டம் இல்லை. ஆனா ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடுறவன் ஒரு மனுசனா அதும் இந்தமாரி பொண்ணுகிட்ட…”

“நீ பண்ண பித்தலாட்டம் எல்லாம் கம்மி. வெங்கடாஜலம் இந்த சித்தர்ராஜா ஒன்னயே சாப்பிட்டுடுவான். ஒனக்கு சில வித்தைகள் தெரிஞ்சாலும், நீ அவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் இல்லன்னா அவ்லோதான்.”

“நான் என்னசாமி பண்ணட்டும் நீங்களே சொல்லுங்க!”

“நானா வெங்கடாஜலம் நீ நல்ல விஷயமா என்கிட்ட உதவின்னு வந்திருந்தா நிச்சயம் நான் உதவி செய்வேன்.”

“அப்போ இரசவாதம் கெட்ட விஷயமா சாமி?”

“அது உனக்கு வேண்டான்னுதான் சொல்றேன்!”

“அப்படின்னா நான் அதை தெரிஞ்சிக்ககூடாதா?”

“நீ தெரிஞ்சிக்க ஆசைப்பட்டால் நொடிப்பொழுதில் காண்பித்து விடுவேன். நீ ஆழ நினைக்கிறாய் இது தப்பு.”

“நான் நிச்சயம் அவர்கள் உதவியோடு அதை கண்டுபிடிக்காமல் போவதில்லை சாமி.”

“உன் அழிவை யாரால் தடுக்க முடியும் நான் வருகிறேன்.” நொடிப்பொழுதில் அந்த மரம் இருந்த அடையாளமே தெரியாமல் அந்த மரம் காணாமல் போய்விட்டது.

 

நாயக்கன் பட்டி.

 

சாந்தா.

எதிரில் பால் டம்ளர் அதில் விஷம் கலந்திருப்பது அப்பட்டமாய் தெரிந்தது.

சாந்தா பேருக்கேத்த மாதிரி சாந்தமான முகம். ஆனால் கால்கள்தான் சற்று ஊனம்.

அவள் அந்த விஷம் கலந்த பால் டம்ளரை எடுத்து குடிக்க போன சமயம் வாசலில் “டொக்… டொக்… டொக்…” கதவு தட்டப்படும் சத்தம்.

“..ச்சே… நிம்மதியா சாகக்கூட விடமாட்டேங்கறாங்க” சலித்துக்கொண்டே கதவை திறந்தாள் சாந்தா. வெளியே சரண் நின்றிருந்தான்.

“வாடா நீ ஒருத்தன் தான்டா இன்னமும் எங்கூட இருக்க!”

“ஏய் லூசு விட்டுப்போக இது உறவோ காதலோ இல்லை நட்பு சாந்தா.”

“நட்பு சந்தோசமான தருணத்துல கூத்தடிக்கும். கஷ்ட்டமான தருணத்துல ஓடி ஒழிஞ்சிக்கும் ஆனா, நீ மட்டும் ஏன்டா இன்னமும் இப்படி என் உயிர வாங்கர?”

“அவ்வளவு சீக்கிரம் ஒன்ன விட்டுடுவேனாடி? ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லை. இருபத்தைந்து வருட நினைவுடி. நம் நட்பு நான் பால்வாடி க்ளாஸ்ல தண்ணீனு நெனச்சி எண்ணெய் குடிச்சிட்டு வாந்தி எடுத்து தவிச்சப்ப உன் மடியில போட்டுக்கிட்டு எனக்காக நீ கதறனது இன்னும் எம்மனச விட்டு போகலடி.”

“பேசாம அப்படியே இருந்துருக்கலாம் இல்லடா. எவ்வளவு சந்தோசமான காலம் அது.”

“அப்படியே இருந்திருந்தா, இன்னைக்கு அந்த நினைவு என்பது இல்லாம போயிருக்கும் அதை நெனச்சி நெனச்சி ரசிக்கிற இன்பமே தனிதான்டி. சரி நாளன்னக்கி பாரதிய மாமா பொண்ணுபாக்க வறாங்க வந்துரு. அதான் சொல்லிட்டு போலான்னு வந்தேன்.”

“சரிடா…அப்புறம் வேற எதுவும் சொல்லாமப்போற…”

“நான் எத சொன்னாலும் நீ கேக்க மாட்ட. அதான் ஒன்னும் சொல்ல. ஆனா ஒன்னு மட்டும் சொல்ற நல்லா கேட்டுக்க… அந்த ராஜா ஒன்ன ஏமாத்திட்டுப்போக நான் விடமாட்டேன். ஞாபகம் வச்சிக்க நான் போய்ட்டு வர்ரேன்.”

சொல்லிவிட்டு கிளம்பும் போது, கதவு தாழ்ப்பாளில் அவன் கழுத்தில் போட்டிருந்த அந்த இரசமணி மாட்டிக்கொண்டது. அவனும் ஏதோ சிந்தனையோடு வெடுக்கென திரும்ப அந்த இரசமணி பிய்த்துக்கொண்டு காற்றில் பறந்து எங்கோ போய் விழுந்து விட்டது. அவனும் எங்கெங்கோ தேடிப்பார்த்து விட்டான் கிடைக்கவில்லை. அதை ஒரு பொருட்டாக அவன் நினைக்கவில்லை.

“சரி சாந்தா நான் போய்ட்டு வர்ரேன் அந்த மணி கெடச்சா எடுத்து வை.”

“சரிடா பாத்து போ.”

“ஆமா நான் சீமைக்கு போறேன் பாரு பாத்து போக மூனு தெரு தள்ளி போனா என் வீடு.”

“யப்பா போய்ட்டு வா.”

“..ம்ம் அது போய்ட்டு வர்ரேன்” சொல்லிவிட்டு கிழம்பிய உடனே சாந்தா முதல் காரியமா அந்த பாலை குடிக்க முனைந்தாள்.

விஷம் ஏறி நீளமாக இருந்த அந்த பால் கறந்த பாலை விட வெண்மையாக இருந்தது.

எப்படி இப்படி ஆச்சி தன்னைத்தானே கேட்டுக்கொண்டு குடித்தாள். பால் வாசத்திற்கு பதிலாக திருநீரு வாசமாக இருந்தது. இறுதியாக அது அந்த டம்ளருக்குள்தான் இருந்தது நீளநிறமாக …

 

…..

 

வீடே தங்கம். ரவிக்கு காண்பது கனவா நினைவா என்று தெரியவில்லை அப்படியே தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.

“என்னப்பா இப்ப நம்பறியா?”

“அய்யோ எனக்கு ஒன்னுமே புரியலை நீங்க யாரு என்வீடு எப்படி தங்கமா மாரிடுச்சி ஒரே கொழப்பமா இருக்கு.”

“நான் ஒரு பிச்சைக்காரன் சித்தர்காடு கோவில்ல பிச்சை எடுக்கறேன்பா.”

“இல்ல நீங்க பொய் சொல்றீங்க.”

“அதுக்காக ID கார்டா காட்ட முடியும் நம்பித்தான் ஆகனும்.”

“சரி நான் நம்பறேன். நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. சித்தர்கள் இந்த காலத்துலயும் இருக்காங்களா?”

“உனக்கு பாரதியை தெரியுமா?”

“சாமி…”

“உனக்கு பாரதியை தெரியுமான்னு கேட்டேன்.”

“தெரியும் சாமி.”

“யார் அது?”

“என்னோட காதலி சாமி.”

“உன்னோட காதலிய எத்தனை வருஷமா உனக்குத் தெரியும்?”

“இருபது வருஷமா தெரியும்.”

“..ம்ம் இருபது வருஷமா தெரியும். உன் காதலி உண்மையா இல்லை இராண்டாயிரம் வருஷம் முன்னாடி வந்த காதல் உண்மையா?”

“இப்படி கேட்டா எப்புடி சாமி ரெண்டுமே உண்மைதான்.”

“அப்புடியா இரண்டாயிராம் வருஷம் முன்னாடி வந்த காதல் இன்னும் இருக்குமா?”

“இருக்கறதாலதான காதலிக்கிறோம்.”

“அப்போ இருக்குன்னு நீ நம்பற இல்லையா?”

“ஆமா…”

“சித்தர் இருக்காங்கன்னு நானும் நம்பறேன்.”

“சரி இருக்கட்டும் நீங்க யாரு?”

“அதான் முன்னமே சொன்னனே…”

“இல்ல நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கொள்ளாமல் ஒங்களை இங்க இருந்து போக விட மாட்டேன்.”

“ஹாஹாஹா”

“எதுக்கு சிரிக்கிறீங்க?”

“நீ கூப்பிட்டா நான் வந்தேன். வந்த எனக்கு போகத்தெரியாதா?”

“என்ன மேஜிக் பண்ணி மறையப்போறீங்களா ?”

“ஓ அந்த அளவுக்கு தெரிஞ்சி வச்சிருக்கியா?”

“நான் படிச்சவன் சாமி.”

“படிச்சவன்தான் இன்னைக்கு முட்டாளா இருக்கான். இந்தா இதை மோந்துப் பாரு.” கோவணச்சாமி எதையோ குடுத்தார். அவனும் ஆர்வத்துடன் மோந்துப் பார்த்தான்.

விளைவு… அப்படியே மயங்கி விட்டான்.

சாமி என் பையன்!

“ஒன்னும் ஆகாது செட்டியார் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சிடுவான். நான் வருகிறேன் மீண்டும் எதையோ தூவி விட்டுப்போனார். வீடு பழைய நிலைக்கே வந்து விட்டது.

தொடரும் …

பகுதி 10


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »