tamilnenjamஉடல் அழகு என்பது நிரந்தர மல்ல. அதை நம்பி மன அழகைப் புறக்கணிப்பவர்கள் வாழ்வில் நிம்மதியாக இருப்பதில்லை. சேற்றில் விழுந்து புழுக்களாய் நெளிய வேண்டிய நிலைதான் ஏற்படும். ஆணவக்காரியான தன் தோழி யின் வாழ்வில் ஏற்பட்ட சோக நிகழ்ச்சியை துயரத்துடன் விவரிக்கிறார் ஒரு சகோதரி:

எங்கள் வீட்டிற்கு எதிர்த்த வீட்டில் இருந்தவள்தான் ராணி. என் தங்கையின் தோழி. மிகவும் அழகி. ஆணவம் பிடித்தவள். தனக்கு வரும் கணவன் அழகனாக, தனக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். இருவரும் நடந்து சென்றால் தெருவே பார்த்து வியக்க வேண்டும் என்று சொல்வாள். ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், வருகிற வரன்களை தன் ஆணவத்தினால் அது சரியில்லை. இது சரியில்லை. குட்டை, நெட்டை என்று சொல்லித் தட்டிக் கழிப்பது அவளுக்கு வேடிக்கை ஆகிவிட்டது.

இந்த நிலையில் ராணியின் தாய்க்கு உடல்நிலை சரிஇல்லை. இவளோ கல்யாணம் வேண்டாம் என்றாள். அவளின் தந்தை இவள் எதற்கும் கட்டுப்பட மாட்டாள் என்று நினைத்து உடனே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தை நடத்தி விட்டார். மாப்பிள்ளை விவசாயி. இது ராணிக்கு பெரிய ஏமாற்றமாகி விட்டது.

முதல் இரவில் கணவனிடம் “எனக்கு உங்களைக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. என்னை ‘டச்’ பண்ணினால் காலையில் என்னை பிணமாய்த்தான் பார்ப்பாய்” என்று சொல்லவே, பயந்து போன அந்த அப்பாவிக் கணவன் தனி யாகப் படுத்துவிட்டான். இதை யாரிடமும் சொல்லவும் இல்லை.

இவள் எந்த நேரமும் கண்ணீர்விட்டபடி இருக்கவே, மற்றவர்கள் பிறந்த வீட்டை மறக்க முடியாமல் அழுகிறாள் போலும்! என்று நினைத்து விட்டார்கள். ராணியின் கணவனுக்கு ஒரு தம்பி உண்டு. வெளிநாட்டில் வேலை. டாம்பீகமாக இருப்பான். அவன் மீது அவளின் பார்வை பாய்ந்தது. எப்படியோ அவனைத் தன்வசப்படுத்திப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள். தகாத உறவு கொண்டாள். இதை அவளின் கணவனும், மாமியாரும் கண்டித்தனர். அவள் கேட்கவில்லை. இதனால் அவளின் தாலி யைக் கழற்றிக் கொண்டு தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

ருசிகண்ட கொழுந்தன் ராணியின் வீட்டுக்கே வர ஆரம்பித்து விட்டான். அவளும் கர்ப்பமானாள். இதுபற்றி ராணி யின் பெற்றோர் கேட்டபோது “நாங்கள் இருவரும் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டு விட்டோம்”. என்று பொய் சொல்லி அவர்களை நம்ப வைத்து விட்டாள்.

கொழுந்தன் வெளிநாடு திரும்பிச் செல்லும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில், அதிகப் பவுனோடும், சீர் வரிசைகளுடன் பெண் தருகிறேன்; என்று அவனின் லீலைகள் தெரியாத ஒரு பெண் வீட்டார் சொல்ல, அவனும் சரி சொல்லி விட்டான்.

ராணி அவனைச் சந்தித்து “நான் கருவுற்றிருக்கிறேன். எனக்கு என்ன வழி? » என்று அழுது கேட்க, அவனோ « என் அண்ணனிடம் இருந்து ஓடி வந்தவள்தானே? என்னிடம் மட்டும் நீ எப்படி ஒழுங்காக இருப்பாய்? இந்தக் குழந்தையும் எனக்குப் பிறக்கப் போவதுதான் என்று நம்ப சொல்கிறாயா?” என்று கேட்டு விட்டு “இதற்கு மேல் என் கல்யாணத்தை தடுக்க ஏதாவது முயற்சி செய்தால் உனக்குதான் அவமானம்” என்று ஒதுக்கி வைத்து விட்டான்.

இவளோ பித்து பிடித்தவள் போல் இருக்கிறாள். ஊரில் யாரும் இவளுடன் பேசுவதில்லை. இவளைக் கண்டாலே காறி உமிழ்கின்றனர். இவ ளுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. இவளைப் போல் மன அழ கைப் பார்க்காமல் புற அழகை மட்டும் ரசிப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.

Categories: கட்டுரை

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52

தொடர் – 52

உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51

தொடர் – 51

உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..

பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50

தொடர் – 50

ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50  »