10

நாயக்கன் பட்டி

 

செட்டியார் வீட்டு வாசலில் சர்ர்ர்னு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கினான் செட்டியார் மகன் ரவி. காதல் தேசம் அப்பாஸ் மாரியே இருந்தான்.

“அப்பா…” காரில் இருந்து இறங்கியவன் அமெரிக்கா ரிட்டன்னு கூட பாக்காம வீதியிலேயே கதற தொடங்கி விட்டான். அதுதானே பாசம்!

மகன் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் செட்டியார்.

“வாடா ரவி நல்லா இருக்கியா?”

“அப்பா நீங்க செத்துட்டதா போன் பண்ணாங்கலே?”

“நான் பொலச்சிட்டன்னு உனக்கு போன் பண்ணாங்கப்பா! அதுக்குள்ள நீ கெலம்பிட்ட…”

“அப்பா நீங்க பலமுறை இந்தியா வான்னு கூப்பிட்டு நான் வல்லன்னு சொன்னதால இப்படி ஒரு நாடகமா?”

“நாடகம் இல்லப்பா உண்மையிலேயே நான் செத்துட்டேன்! அதுதான் நிஜம்!”

“இப்போ என்முன்னாடி பேசிட்டுத்தானே இருக்கீங்க இதும் நிஜம்தானே?”

“ரவி… இடி விழுந்து நான் செத்துட்டேன். ஆனா அப்புறமா நான் மறுபடியும் உயிரோட வந்துட்டேன்!”

“என்னப்பா மேஜிக்கா?”

“இல்லப்பா மிராக்கில்!”

“அப்படின்னா?”

“ஹாஸ்பிட்டல்ல ஒருசில பேஸன்ட காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் கை விரிச்சிடுவாறு. ஆனா, அந்த ஆள் பொலச்சிக்குவான். அப்போ டாக்ட்டர் சொல்லுவார் இட் ஈஸ் மெடிக்கல் மிராக்கிள் அவங்களால முடியாத ஒன்ன ஏதோ ஒன்னு இயக்குதுல்ல அதான் மிராக்கில்!”

“சரிப்பா… அந்த மிராக்கில் எப்படி நடந்துச்சி சொல்லுங்கப்பா?”

“நீ மொதல்ல போய் குழிச்சிட்டு வா அப்புறம் பொருமையா பேசலாம்.”

“இல்லப்பா எனக்கு உன்மை தெரியாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு. நீங்க மொதல்ல சொல்லுங்க?”

“என்னாத்தப்பா சொல்றது எல்லாம் சித்தர் அருள்.”

“சித்தரா?”

“ஆமாப்பா…”

“அப்பா, நீங்க எந்த காலத்துல இருக்கீங்க. சித்தர்கள் வாழ்ந்தது கிருதா யுகம். நாம இப்ப வாழறது கலியுகம். இப்பப்போய் சித்தர் புத்தர்னுட்டு இருக்கீங்க. ஒரு யுகத்துக்கு எத்தனை வருஷம் தெரியுமாப்பா?”

ஏ”ன் தெரியாம ஒருயுகத்துக்கே இப்படிச்சொன்னா பூமி தோன்றிய காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் வாழ்ந்திட்டு இருக்க சித்தர்களும் இருக்காங்க உனக்கு தெரியுமா?”

“நீங்க பாத்துருக்கீங்களா?”

“பாத்தாத்தான் நம்பனும்னா… பல விஷயங்கள் பொய்யாதாம்பா இருக்கும்!”

“நான் எந்த விசயத்தையும் பாக்காம நம்ப மாட்டேன்.”

“ஒன்ன யாரப்பா நம்ப சொன்னது?” பின்னாடி யாரோ சொன்னார்கள் திரும்பி பார்த்தான்.

அங்கே…

“சார் நீங்களா நீங்க எப்படிசார் இங்க?”

“ஏம்பா… நீ பாட்டுக்கு அப்பா தவறிட்டாருன்னு வந்துட்டே. ஒரு MD என்கிட்டக்கூட சொல்லனும்னு தோனலை. உனக்கு நீயும் நானும் அப்படியா ரவி பழகி இருக்கோம்.”

“சாரி சார். ஆமா நீங்க எப்படி வந்தீங்க ?”

“நீ வந்த அதே ப்ளைட். நீ வந்த அதே ட்ரெய்ன். பட் இங்க வரதுக்கு மட்டும் உன்ன தொடர்ந்துதான் வந்தேன்.”

“ஆமா… இவர் யார்?”

“இவர்தான் சார் என் அப்பா.”

“என்னப்பா கொழப்பர? உன் அப்பாதான் இறந்துட்டாரே?”

“இல்ல சார், ஏதோ சித்தராம் மூலிகையாம். அதனால இவர் மீண்டும் பொழச்சிட்டாராம்!”

“ஏன் ரவி உனக்கு இதுலாம் நம்பிக்கை இல்லையா?”

“பாக்காத ஒன்ன எப்படி சார் நம்பறது?”

“அப்படியா? உன்னோட வாழ்க்கை நீ பாத்து வாழ்றதுதான். உன்னோட எதிர்காலத்த பத்தி கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்?”

“அதெப்படி சார் முடியும்?”

“ஏன் முடியாது? ரோட்டோரம் ஒரு கிளிக்கிட்ட அஞ்சி ரூபா குடுத்தா அது உன்னோட எதிர்காலத்த ஏதோ கொஞ்சம் சொல்லும். அதே கைரேகை பாக்கறவங்ககிட்ட உன் கைய காமிச்சா உன் வாழ்கையவே சொல்லுவாங்க. ராத்திரியில வர கோடாங்கிக்கு எப்படிப்பா உன்னோட எதிர்காலம் பத்தி தெரியும்? அவன் வந்து நாளைக்கு என்ன நடக்குதுன்னு இன்னைக்கு சொல்லிட்டு போவான்.”

“எல்லாமே ஏமாத்து வேளை சார்.”

“தப்பா சொல்ற ரவி எல்லாத்துலயும் ஏமாத்தறவங்க இருக்காங்க. அந்த ஏமாத்தறவங்க இன்னைக்கு சித்தர்கள் வரைக்கும் வந்துட்டாங்க.”

‘ட்டிரீங்…’ ரவி போன் அடிக்குது;

“ஒரு நிமிஷம் சார்.”

“என்ன… அப்படியா?”

“என்னப்பா ஆச்சி?”

“அப்பா அமெரிக்கால எங்க MD செத்துட்டாறாம்.”

“அப்போ இது யாரு?”

ரவி அருகில் இருந்தவர், ஓடிச்சென்று பூஜை அறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டார். பின்னாடியே போன ரவி பூஜை அறை கதவை திறந்தான்.

உள்ளே…

சாம்பிரானி புகை அந்த புகை மூட்டத்துக்கு நடுவே கோவணச்சாமிதான் அமர்ந்திருந்தார்.

“யோவ் யாருய்யா நீ?”

“இதுதான் படித்த நாகரீகமா?” கோவணச்சாமிக் கேட்டார்.

“யாருன்னே தெரியாத நீ எங்க வீட்டு பூஜை அறைக்குள்ள ஒக்காந்திருக்கியே இதுதான் ஒன் நாகரீகமா?”

“யாருக்கு யாரை தெரியலை. ஒன்ன எனக்கு நல்லாத்தெரியுமே !”

“எனக்கு ஒன்ன தெரியலை.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது செட்டியாரும் பூஜை அறையை எட்டிப்பார்த்தார். கோவணச்சாமியை பார்த்ததும் காலில் விழுந்து விட்டார்.

“இப்போ என்னை யாருன்னு தெரிஞ்சிகிட்டியா?”

“என்ன என் அப்பாவை மயக்கி வச்சிருக்கியா?” ரவிதான் கேட்டான்.

“மயக்குவதெல்லாம் எனக்குத்தெரியாதப்பா?” கோவணச்சாமி சிரித்துக்கொண்டேச் சொன்னார்.

“ஏ… ஒன்னமாரி ஆளுங்க எல்லாம் அப்படி இப்படின்னு எதாச்சும் காட்டி மயக்கிட்டு இருக்கறதெல்லாம் சுறுட்டிட்டு போய்டுவீங்க. அதானே ஒங்க ப்ளான்?”

“ஒன் காசு பணம் எனக்கெதுக்குப்பா ? எங்கிட்ட இல்லாததா உன்கிட்ட இருக்கு?”

“ஆமாய்யா போட்டுக்க முழுசா ஒரு சட்ட வேட்டி இல்லாம கோவணத்தை கட்டிகிட்டு சுத்தர ஒங்கிட்ட என்னவிட அதிகமா இருக்கா பிச்சக்கார நாயே…”

“உண்மைதான் நான் மட்டுமா பிச்சக்காரன் அதோ ஒனக்கு பின்னாடி மாட்டிருக்க அந்த கோவிந்த ராஜ பெருமாளே பிச்சைக்காரன் தானே…”

“பெருமாள் சாமியவா பிச்சக்காரன்னு சொல்ற அவர் எவ்வளவு பெரிய பணக்காரச்சாமி தெரியுமா?”

“என்னை விடவா?”

“யோவ் ஒங்கிட்ட என்னயா இருக்கு?”

“பாத்தா நம்புவியா?”

“கண்டிப்பா!”

ஒரு நிமிஷம் இரு கைகளில் கொஞ்சம் திருநீரை அள்ளினார். எதையோ சொல்லி அந்த வீட்டிற்குள் தூவினார். அந்த திருநீரின் வெண்மை அடங்கியதும் அந்த வீடே மஞ்சள் நிறமாக மாரி விட்டது.

ரவி அருகில் சென்று கொஞ்சம் சொரண்டிப்பார்த்தான். வாயடைத்துப்போனான் காரணம்?

வீடே தங்கமாக மாரிவிட்டது.

தொடரும்…

பகுதி 9


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »