• நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.
  • முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும் ஒன்றாக டி.வி. பார்த்து கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயேமூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள் .
  • காதலர்களை எடுத்துக் கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் கடலை ‘போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூட பலமணிநேரம் பேசுவார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும் இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்பப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.
  • பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்தப் பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக் கொடுத்து அசத்துங்கள் .
  • சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது .
  • பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்தப் பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.
  • உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.
  • உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன் ‘என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.
  • மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும் போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள் ! அதனால் காதலியுங்கள், மனைவியை.!

– செல்வ சுதங்கன்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

குடும்பம்

சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!

இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…

 » Read more about: சிறுவர்கள் உலகம்  »

குடும்பம்

தூக்கம் தொலைத்த இரவுகள்

கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?

கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?

 » Read more about: தூக்கம் தொலைத்த இரவுகள்  »

கட்டுரை

சீ… தனம் புலம்பெயர்விலுமா!

பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்
மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்
விதை போட்டது யாரென்று புரியாத போதும்
புலம்பெயந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம்

பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா!

 » Read more about: சீ… தனம் புலம்பெயர்விலுமா!  »