9

 

“நான் எப்படிப்பா ஒன்ன யாருன்னு தெரிஞ்சிக்க வைக்க முடியும்? நீ தான் அதற்கு முயற்சி பண்ணணும். இன்னும் என்னை யாருன்னு என்னாலயே தெரிஞ்சுக்க முடியலை!”

“நீங்க யாருன்னு எங்களுக்கு தெரிஞ்சுருச்சி சாமி!”

“அப்படியா நான் யாரு?”

“நீங்க சாமி…”

“சொல்லு…”

“ஆமா ஒருத்தர்க்கு உயிர் குடுக்கறவங்கதான சாமி!”

“குடுக்கறவங்க மட்டுந்தான் சாமியா? உயிர் எடுக்கறவங்களும் சாமியாத்தான இருக்காங்க.”

“அது எங்களுக்கு தெரியாது. எங்க கண்ணு முன்னாடி இருக்க நீங்கதான் இனிமே எங்களுக்கு சாமி.”

ஊரே அவர் காலில் விழுந்தது. அந்த சாமியும் அவர்களை ஆசிர்வதித்தார். செட்டியாரும் சாமியிடம் ஆசி வாங்கினார்.

“என்ன செட்டியார் எப்போ கல்யாணம்?”

“சாமி பையன் நாளைக்கு வந்திடுவான். வந்ததும் கல்யாணம் தான்.”

“உன் பையன் ஒத்துக்குவானா?”

“பாரதித்தான் பொண்ணுன்னா, அவன் கண்டிப்பா ஒத்துக்குவான் சாமி. பையனுக்கு பாரதின்னா உசுரு சாமி.”

“ம்ம்… பையன் கல்யாணம் முடிஞ்சதும், பொண்ணு கல்யாணமா?”

“ஆமா சாமி!”

“பையன் யாரு?”

இந்த கேள்விக்கு சரணும் கலைவாணியும் பார்த்துக்கொண்டார்கள்.

“நம்ம சித்தேஸ்வரா ஜுவலர்ஸ் ஓனர் பையன்தான் சாமி.” இந்த பதிலால் இருவரும் அதிர்ந்தார்கள்.

“உன் பொண்ணுக்கு அந்த பையனை புடிக்குமா நீ கேட்டியா?”

“இல்லையே சாமி!”

“உன் பையன் விரும்பும் பொண்ண மட்டும் அவனுக்கு கட்டி வப்ப. ஆனா உன் பொண்ணு விரும்பும் பையனை அவளுக்கு கட்டி வைக்க மாட்டியா?”

“எம்பொண்ணு ஒருத்தன விரும்புறாளா? யார் சாமி அது?”

“உன் மாப்பிள்ளையைதான்…”

“அந்த பொருக்கியவா சாமி?”

“ஏம்பா மாப்பிள்ளைன்னா, உன் உறவுமுறை மட்டுந்தான் உனக்கு தெரியுமா/? நீ அவனை மாப்பிள்ளைன்னு சொன்னதைவிட, இவனைத்தானப்பா அதிகம் அப்படி கூப்பிட்டிருப்ப…”

“சரணா சாமி?”

செட்டியார் சரியாக சொன்னதும் கலைவாணி, அடுத்து என்ன ஆகும்முன்னு சாமியை பார்த்தாள்.

“ஆமா அவன்தான்”

செட்டியார் கோவப்படுவார் என ஊரே பார்த்தது. ஆனால்…

“சரணைப்போல ஒரு பையன் நிச்சயம் கெடைக்க மாட்டான் சாமி. அவன்தான் எனக்கு மாப்பிள்ளைன்னா, அவனைதான் எம்பொண்ணு விரும்புறான்னா, கண்டிப்பா நான் அவனையே எம்பொண்ணுக்கு கட்டி வைப்பேன் சாமி.”

“கலைவாணி ஓடிச்சென்று செட்டியாரை கட்டிக்கொண்டாள். சரண் ஓடிச்சென்று சாமி காலில் விழுந்தான்.”

ஊரே இந்த நிகழ்வை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக்கூட்டத்தில் தான் குடுகுடுப்பைக்காரன் கண்ணையனும் இருந்தான். அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இந்த கல்யாணம் நடக்காது ஜக்கம்மா சொல்றா.

 

சித்தர்க்காடு

 

தூரத்தில் தன் தாத்தாவோடு ராஜாவும் வருவதை ரங்கநாதன் பார்க்கிறான்.

“டேய் வாடா மாப்ள நீ எங்கடா இங்க?”

“அத நான் அல்ல கேக்கணும். மலை பக்கமே வராதவன் இங்க என்ன வேலை?”

“நம்மளமாரி திருட்டுப்பசங்களுக்கு இங்க என்ன சாமி கும்புடற வேளையா? எல்லாம் காரியமாத்தான்டா வந்தேன். வந்த எடத்துல என் காலும் போச்சி உன் உயிரும் போச்சி.”

“என்ன உயிர் போச்சா?”

“ஆமா… தாத்தா தான் மறுபடியும் எனக்கு உயிர் தந்தார்.”

“டேய் என்னங்கடா நடக்குது இங்க? அவன் அவன் சாகறீங்க. ஆளாலுக்கு உயிர் தராங்க. கொஞ்ச நேரம் முன்னாடிதான் கோவணச்சாமி எம்மாமனுக்கு உயிர் தந்தார்.”

“டேய் நீ அந்த கோவணச்சாமிய பாத்தியா?”

“ஆமாடா உன் தாத்தாவும் அங்கதான இருந்தாரு.”

“இல்லப்பா நான் அந்த சாமி வந்ததுமே போய்ட்டேன். அந்த சாமி இருக்க இடத்துல என்னால இருக்க முடியாது.”

“சரி மச்சி நீ ஏன் அந்த சாமியப்பத்தி கேக்குற?”

“டேய் அந்த சாமி தங்கமுட்ட போடற வாத்துடா! ஒனக்கு அந்த சாமியப்பத்தி தெரியல. அதான் நீ இப்படி பேசற.”

“எது இதப்பத்தித்தான சொல்ற…” தான் எடுத்து வைத்திருந்த அந்த தங்க அரிசியை காட்டினான்.

“டேய் இதெப்படிடா உங்கிட்ட?”

“இதாலதா மச்சி இன்னைக்கு நான் வீட்டை விட்டு தொறத்தி அடிக்கப்பட்டிருக்கேன்.”

“அத உட்றா வீட்ல நாம இருந்தா ஏதோ நம்மாள முடிஞ்சலவுக்கு தங்கம் வச்சிருப்போம். ஆனா இங்க இந்த சித்தர் காடே தங்கம்டா தங்கக்காட்டுலயே நாம இருக்கம்டா.”

“என்னடா சொல்ற?”

“ஆமான்டா இந்த மலைல இருக்க, ஏதோ ஒரு மூலிகை மட்டும் நமக்கு கெடச்சா போதுன்டா அப்புறம் நம்பள அடிச்சிக்க ஆளே இல்ல!”

“அது மூலிகை இல்லப்பா. அதுக்கு இரசவாதம்னு பேரு. அதுல கை தேர்ந்துட்டா அதை எதுல சேர்த்தாலும் அந்த பொருள் தங்கமா மாறிடும்.”

“ஏன் தாத்தா இந்த காட்டுலயே இருக்கீங்க. செத்தவனையே பொலைக்க வைக்கறீங்க. ஒங்களால இது முடியலையா?”

“என்னால இது முடியாது. நான் பண்ணவும் கூடாது. அதுக்குத்தான் ஒங்க ரெண்டுபேரையும் சேர்த்திருக்கேன். என்னால முடியாததை நீங்கதான் சாதிக்கனும். அதுக்கு சில தியாகங்களும் செய்ய வேண்டியது வரும். என் வாழ்க்கைதான் இப்படி முடிஞ்சி போச்சி. ஆனா நீங்க விட்டுடக்கூடாது. ஒங்க வயசிருக்கும் போதே இத நீங்க கண்டுபிடிக்கனும்.”

அவர்கள் பேசுவதை ப்ரம்ம சித்தர்ன்னு ஒருத்தர் கேட்டுட்டு இருந்தார். அவர்கள் அருகில்தான் ஒரு மரத்தோடு மரமாக அவர் தியானத்தில் இருந்தார். அந்த மரத்தின் கீழ் ஒரு கருப்பு நாய். அது ஒரு கன்னுக்குட்டி அளவுக்கு இருந்தது.

“இரசவாதம்னா என்ன தாத்தா?”

“அது முடிவு. அதுக்கு முன்னாடி, முதல்ல ஆரம்பம்னு ஒன்னு இருக்கு. அதை தெரிஞ்சுக்குங்க.”

“அப்ப சொல்லுங்க…”

“அதுக்கு இது நேரம் இல்லை.”

“அப்போ எப்பதான் தெரிஞ்சிக்கறது.”

“சித்தர் விஷயத்துல பொருமைதான் முதல்ல வேணும். அவசரப்பட்டா எல்லாம் ஒன்னும் ஆகாது.”

“சரி என்ன பண்ணலாம் சொல்லுங்க?”

“எனக்கு ஒரு கருப்பு நாய் வேணும்.”

“எதுக்கு தாத்தா?

“சித்தர்களுக்கு காவல் கருப்பு நாய்தான். அங்கப்பாரு அந்த மரத்துக்கடிய ஒரு நாய் இருக்கே. அதும் ஒரு சித்தர் சாமியோட காவல்தான். அவரு பேரு ப்ரம்ம சித்தர் அவரை யாராலும் பார்க்க முடியாது. இந்த நாய் இருக்க இடத்துல அந்த சித்தர் இருப்பாருன்னு எல்லாரும் சொல்லுவாங்க.”

“அப்படின்னா வாங்க அந்த சித்தரை தேடலாம்.”

“செத்துப்போய்டுவ.”

“தாத்தா என்ன சொல்றீங்க?”

“ஆமாம். அந்த சித்தரை இதுவரைக்கும் யாரும் பாத்ததில்லை. அப்படி மீறி பாத்தவங்களும் உயிரோட இல்லை. அவரை நேருக்கு நேரா பாத்தா பாக்குறவங்களுக்கு பைத்தியம் பிடிச்சி செத்துப்போய்டுவாங்க.”

“என்ன தாத்தா  இப்படி மிரட்டுறீங்க?”

“மிரட்டுலப்பா உண்மைதான் சொன்னேன் இங்க இந்த நாய் இருக்குன்னா அந்த சித்தரும் இங்கதான் இருப்பார். அதனால, நாம ஒடனே இங்க இருந்து போய்டலாம்.”

“சரி தாத்தா கெளம்புங்க!”

“எல்லோரும் போக எத்தனிக்கும் போது…”

“நில்…” காடே அதிரும் படி ஒரு குரல்.

மூவரும் நின்றார்கள். அந்தக்குரல் தொடர்ந்தது.

“வெங்கடாஜலம் நீ மட்டும் இங்கு நில். அவர்கள் இருவரையும் போகச்சொல்.”

“ஏ போங்கப்பா ப்ரம்மச் சித்தர் வரப்போறாரு.”

அவர்கள் போவதாக சிறிது தூரம் வந்து விட்டு ஒரு மரத்தின் பின்னாடி ஒழிந்து கொண்டார்கள்.

விதி யாரை விட்டது. அந்த மரத்தில்தான் ப்ரம்மச் சித்தர் இருந்தார்.

தொடரும் …

பகுதி 8


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »