8

 

செட்டியார் உடல் அசைந்தது. ஆனால்,

கோவணச்சாமி உடல் சரியத்தொடங்கியது. அவர் கீழே விழும் முன் சரண் ஓடிச்சென்று தன் மடியில் தாங்கினான் ஏனோ தெரியவில்லை ஒரு வேகம் உணர்ச்சி அதனால் பெரிதாய் கத்தினான்.

“சாமீ …”

“அண்ணா அழாதண்ணா”

“முடியல பாரதி முடியல நம்ப மேல பாசம் காட்டறங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா நம்பள விட்டு போய்ட்டே இருக்காங்க பாரதி. செட்டியாருக்கும் நமக்கும் என்ன உறவுமுறையா? ஆனா வாய்நிறையா மாப்ள மாப்ளன்னு கூப்பிட்டாறே… இந்த சாமிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்ப மேல பாசமா இருந்தாறே இப்படி ரெண்டுபேரையும் இழந்துட்டமே பாரதி.”

சரண் இப்படி கத்திட்டு இருக்கும் போது “செட்டியார் பொழச்சிட்டாரு… செட்டியார் பொழச்சிட்டாரு…” ஊரே கத்தியது சரணும் பார்த்தான். செட்டியார் ஏதோ தூங்கத்துல இருந்து எழுந்த மாரி வந்து நின்றார். ஆனால் முன்பு இருந்ததை விட முகத்தில் ஒருவித ஒளி முதல் ஆளாய் அவர்தேடியது ராஜாவைத்தான். அதோ அந்த மூலையில் நின்றிருந்தான்.

“டேய் நான் ஒன்ன வீட்ட விட்டு போகச்சொன்னல இன்னும் இங்க என்னடா பன்ற?”

“மாமா நீங்க…”

“செத்துட்டன்னு நெனச்யியாடா? அவ்லோ சீக்கிரம் நான் சாகமாட்டேன் டா! நீ மொதல்ல இடத்தை காலி பண்ணு.”

அவனும் தன் “ஆசை நிராசையாவே போகுதே”ன்னு பொழம்பிட்டே போனான்.

“நீ எதுக்கும் கவலை படாதே. நான் இருக்கேன் எல்லாம் பாத்துக்கலாம்.” மீண்டும் வெங்கடாஜலம் தான் இப்படிச்சொன்னார்.

“பேசாம இருங்க சாமி”

பேசிட்டே சித்தர்காடு மலைக்கு இருவரும் வந்துவிட்டார்கள்.

ராஜாதான் ஆச்சர்ய பட்டான். “சாமி இவ்லோ சீக்கிரம் மலை ஏறிட்டமே எப்படி?”

“எல்லாம் ஒருகலை. நேரம் வரும்போது ஒனக்கு எல்லாம் சித்தி ஆகும்.”

“நன்றி சாமி.”

செட்டியார் பொழச்சிட்டாருன்னு ஊரே வேடிக்கை பார்த்தது. புது அனுபவம். செத்தவங்க பொழக்கறதுன்னா சும்மாவா? ஆனா, ஊருக்கு கோவணச்சாமியை யாருக்கும் தெரியலை. “இவரு யாரு இவரு பேரு என்னா மவராசன். ஒரு உசுற பொழைக்க வச்சிட்டு இப்படி செத்துட்டுயே சாமி.”

“சாமிக்கு ஏதப்பா சாவு அதனால என்ன சாமின்னு நெனச்சிடாதீங்க. நானும் சாதாரன மனுசன்தான். ஆனா நான் அந்த சித்தர் காட்டுலயே திரியற மனுசன். அதனாலதான் செட்டியார் உயிர் போக இருந்தப்ப எனக்கு தெரிஞ்ச மூலிகைகளை வைத்து அவர் உயிரை நிறுத்த முடிஞ்சது.” என்ன நடக்கின்றதென்று தெரியாமல் ஊரே திகச்சிப்போய் நிற்கிறது!

“கூட்டத்தில் ஒருவன் கேட்டான் சாமி நீங்க யாரு?”

“நான் யாருன்னுதான்பா தேடிட்டு இருக்கேன்.”

“என்ன ஒங்களை நீங்களே தேடறீங்களா?”

“ஆமாப்பா ஒன்ன யாருன்னு கேட்டா நீ என்ன சொல்லுவ?”

“நான் எம்பேரு குமாருன்னு சொல்லுவேன்.”

“நான் உன் பேரை கேக்கலையே நீயாருன்னுதான கேட்டேன்? சரி நீ சொன்னமாரியே ஒம்பேரு குமாருன்னா அந்த குமாருங்கறது எது?”

“எதுன்னா நான்தான் குமாரு!”

“நீதான் குமாருன்னா? அந்த குமாரு எது உன்னோட ஒடம்பா? உயிரா? இல்லை உயிரை இயக்கும் இதயமா? அதை இயங்க செய்யும் இரத்த ஓட்டமா? நுறையீரலா கனையமா இதில் எது குமாரு?”

“என்ன சாமி ஒன்னும் புரியலையே!”

“நானே அது புரியாமத்தானப்பா அலஞ்சிட்டு இருக்கேன்.”

“எனக்கு புரியலன்னாலும் புரிஞ்சிக்கனும்முன்னு தோனுது. சாமி நீங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நான் யார்?”

“நீயாருன்னு நீதாம்பா தெரிஞ்சிக்கனும். சரி நீ அப்படிங்கறது என்ன?”

“நான் அப்படிங்கறது என்னோட உடம்பு!”

“அப்படியா நீ செத்து போய்ட்டா… குமார் செத்துட்டான் அப்படின்னு சொல்லுவாங்களே! அப்பவும் உடம்புன்னு ஒன்னு இருக்கும். உயிர் இல்லாத அந்த உடம்பை பொணம் அப்படின்னு சொல்லுவாங்க. அப்போ அந்த குமார் யார்?”

“அப்படின்னா என் உயிர்தான் குமாரா?”

“அதெப்படி அப்படி சொல்ல முடியும்? இதயம் நின்னுட்டாலும் குமார் செத்துட்டான்னுதான் சொல்லுவாங்க! நாடித்துடிப்பு நின்னுட்டாலும் குமார் செத்துட்டான்னுதான் சொல்லுவாங்க! உனக்குள்ள இருக்க ஒன்னுதான் குமாரா இல்லை அழியும் உன் உடம்புதான் குமாரா?”

“எனக்குள்ள இருக்கும் ஏதோ ஒன்னுதான் குமாருன்னா… நான் பொறந்ததும் என்ன பாத்துட்டுத்தானே எனக்கு குமாருன்னு பேர் வச்சிருப்பாங்க அப்போ அதுக்கென்ன சொல்வீங்க?”

“எதப்பாத்து உனக்கு குமாருன்னு பேர் வச்சிருப்பாங்க? ஏன் குமாரின்னு வச்சிருக்கலாமே ஏன் அப்படி வைக்கலை?”

“ஏன்னா நான் ஆம்பளை பையன்.”

“அப்போ அந்த ஆம்பிளை என்பதுதான் குமாரா?”

“அந்த குமார் கடைசியாக ஒன்னும் புரியாம கோவணச்சாமி காலில் விழுந்தான்.”

“சாமி எனக்கு சத்தியமா ஒன்னும் புரியலை. ஆனால் எனக்கு இப்போ நான் யாருன்னு தெரிஞ்சிக்கனும்னு தோனுது. நீங்கதான் அதுக்கு வழி நடத்தனும்.”

“நானா… ஹாஹாஹா…

தொடரும் …

பகுதி 7


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »