7

 

சித்தர்க்காடு மலை

 

தன் பின்பக்கம் விழுந்த கை யாருடையது என்று திரும்பிப்பார்த்த ரங்கநாதனுக்கு மூச்சே நின்று விட்டது. ஏன்னா இதுவரைக்கும் அப்படி ஒரு யானைய அவன் பாத்ததே இல்ல. அவ்வளவு உயரமா அவ்வளவு அடர்த்தியா பாக்கவே பயங்கரமா இருந்தது. இந்த சித்தர்க்காட்டில் மனுசங்களே அதிகம் இருக்க மாட்டாங்க. இதுல விலங்குகளுக்கு வாய்ப்பே இல்ல. ஆனா இன்னைக்கு இப்போ இங்க ஒரு யானை அவனால் நம்பவே முடியலை. அவன் மேல் விழுந்த தும்பிக்கை அப்படியே அவனை வலைத்து பிடித்து தூக்கிச்சென்றது. மீண்டும் வாழலாம் என்று நினைத்தவன் மீண்டும் சாகப்போகிறோமே என்று கலங்கினான்.

அவன் ஏக்கம் அந்த யானைக்கு தெரிந்ததோ என்னவோ ஓரிடத்தில் அவனை விட்டது. அவனும் பெரிதாய் அந்த யானையை கும்பிட்டான். ஆனால், எதிர் பார்க்காத நேரத்தில் துதிக்கையால் அவனை தள்ளியது. மீண்டும் ஒரு பெரிய பள்ளம் அவனை இழுத்தது. இந்த முறை ஒரு நீர்நிலைக்குள் சென்று விழுந்தான். விழுந்த வேகத்தில் எழுந்த நீர்க்குமிழிகளால் அவனால் நீருக்குள் சரியாக பார்க்க முடியவில்லை. ஏனோ அந்த நீர்நிலைக்குள் அவனுக்கு மூச்சித்தினறல் எடுக்கவும் இல்லை. அதனால் சிறிது நேரம் நீருக்குள்ளே இருந்தான் குமிழிகள் அடங்கியது. மெல்ல கண்களை திறந்தான். அங்கு அவன் கண்டது கனவா நினைவா தெரியவில்லை. அந்த நீருக்குள் நடுநயமாக ஒரு பெரிய சுயம்பு லிங்கம். அந்த லிங்கத்தை சுற்றிலும் அமர்ந்த வாக்கில், நின்ற வாக்கில், படுத்த வாக்கில் என்று சரியாக 18 பேர் தூங்குவதைப்போல் இருந்தார்கள் அவனுக்கு ஒன்னுமே புரியவில்லை.

யார் இவர்கள்?

 

நாயக்கன் பட்டி.

 

இடி தாங்கி என்ன நினைத்ததோ தெரியல நேராக அந்த இடி சீனிவாச செட்டியார் காரில்தான் விழுந்தது.

‘டமால்…’  இடி சத்தம் இப்படித்தான் இருக்கும் என்று அன்றைக்குத்தான் அந்த ஊரில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

“அய்யய்யோ… நம்ம அய்யாவோட கார்ல இடி விழுந்துருச்சே ஓடியாங்கடா…”

ஊரே ஒன்றுகூடி அந்த காரை திறந்தது. ராஜாவும் இருந்தான், கூடவே வெங்கடாஜலமும் இருந்தார்.

கரிக்கட்டையாய் சீனிவாச செட்டியார் விழுந்தார்.

“பாத்தியா நான்தான் சொன்னல்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல கெழவன் செத்துருவான்னு நடந்துருச்சா…”

“ஆமா சாமி மாமா செத்துட்டான்!”

 

சீனிவாச செட்டியார் வீட்டில் ஊரே திரண்டிருந்தது. சரணும் பாரதியும் கூட அங்குதான் இருந்தார்கள். பத்து வயதில் அமெரிக்காப்போன பையன். அவன் கல்யாணத்துல எல்லாரும் பாத்துக்கங்கன்னு சொன்னவரு அவனை தன் கருமாதிக்கு வரவைக்க போகிறார் அவரது மகனுக்கு தகவல் சொல்லியாச்சி.

சரண் பாரதியைப்பார்த்தான் “இந்த மனுஷனால நீ நல்லா வாழப்போறன்னு நெனச்சென் இப்படி ஆய்டுய்சே பாரதி.”

“விடுண்ணே… யாருக்கு என்னன்னு இருக்கோ அது நடந்தே தீரும்ண்ணே…”

“ஆமாம் நிச்சயம் உன் கல்யாணம் நாளை நடந்தே தீரும்” கோவணச்சாமிதான் இப்படிச்சொன்னார்.

“சாமி நீங்க எப்படி இங்க?”

“நல்லவங்க வீட்டு விசேஷத்தில யார் வேணாலும் கலந்துக்கலாம்பா!”

“சாமி இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு ஒங்களுக்கு தெரியுதில்ல. பேசாம இருங்க சாமி.”

“சரண் செட்டியார் இவ்லோ சீக்கிரம் போகக்கூடிய ஆள் இல்லை. ஒரு நிமிஷம் இரு”ன்னு சொன்னவர் செட்டியார் சடலம் அருகில் சென்றார். முதலில் காலை அழுத்திப்பார்த்தார். பிறகு தொடை இடுப்பு கை கழுத்து என்று சில இடங்களை தொட்டுப்பார்த்தார். அப்படி அவர் தொட்ட இடமெல்லாம் நாடித்துடிக்கும் இடமாம். இறுதியாக இரு புருவம் மத்தியில் நெற்றிப்பொட்டில் கை வைத்துப்பார்த்தார். அங்குமட்டும் நான் போகவா நான் போகவா என்று சிறிது துடிப்பு இருந்ததை கண்டுபிடித்தார்.

“செட்டியார் சாகல யாரும் கவல படாதீங்க. ஒரு ஐந்து நிமிஷம் எல்லாரும் சத்தம் போடாம இருங்க”ன்னு சொன்னவர், தன் இடுப்பு பகுதியில் தொங்கிய மூங்கில் குடுவையில் இருந்து சில மூலிகைகளை எடுத்தார். கசக்கினார். அந்த சாறை செட்டியார் காதுகளில் விட்டார். பிறகு செட்டியாரின் நாசி அருகே வைத்து ஊதினார். இறுதியாக செட்டியாரின் வாயை பிளந்து மிச்சம் இருந்ததை வாய்க்குள் போட்டு விட்டு, ஓர் இடத்தை தேடிப்பிடித்து சம்மனம் போட்டு அமர்ந்து எதையோ சொல்லத்தொடங்கினார். நேரம் கறையத்தொடங்கின. அந்த ஊர் மக்கள் இன்று ஒரு அதிசயத்தை பார்க்கப்போகிறார்கள். சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து செட்டியார் உடல் அசையத்தொடங்கியது.

ஆனால், கோவணச்சாமி உடல் சரியத்தொடங்கியது!

 தொடரும் …

பகுதி – 6


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »