krish-houseவீடு கட்டும் எண்ணம் எப்படி வந்தது எனக்கு?
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில்[1988] அல்லாடும் நிலையிலும்
தனிக் குடும்பம் கண்ட தவிப்பாலா?
வாடகை வீடுகளில் வதைப்பட்ட வரலாறாலா?

கொட்டும் மழையில் என் கோமேதகவல்லி [மனைவி]
தலை ஒரு பக்கமும், மறுபக்கம் என் தலையும் வைத்து
கயிற்று கட்டிலில் கணன்று கொண்டிருக்க
அடியிலோ சென்றது அலை அலையாய் அடைமழையின் தண்ணீர்.

என் நண்பர் கொடுத்த கோதுமை [இலவசமாய்]
குளிரில் ரத்த நாளங்கள் சுருங்காமல்
எங்கள் வாழ்க்கை வண்டியின்
சக்கர ஆரக்காலாய் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.
வீடும் கட்டினேன் [2003] கடனில் விழுந்தேன்

எட்டு வயதில் என் மகள் சொன்னாள்
வேண்டாம் அப்பா வீடு, விற்று விடுங்கள்
கடனை தீர்த்து வீணர்களின் வாய்ப் பேச்சை நிறுத்துங்கள்
புதிய வீடு வைப்போம், அதுவும் சின்னதாய்
நம் மூவர்க்கும் ஏற்றபடி வைப்போம் என்றாள்.

என் சின்னக் குயிலின் சிந்தையில் வந்த வார்த்தை
சோர்வாய் இருந்த என் குருதியில் – சோழனின் வீரத்தை
கடாரம் கொண்ட சோழனின் வீரத்தை சுருதியாய் சேர்த்தது
விற்ற வீட்டுக்கு பதிலாய் புதிய வீடு கட்டும் எண்ணம் வந்தது.

சின்னக் குழந்தையின் சிறப்பான வார்த்தை
என் உயிரான மனைவியின் ஒப்பில்லா உந்துதல்
விழுந்த என் மனது எழுந்து நின்றது
அதுவும் அழகான ஒரு வீடாய் எழுந்து நின்றது [2011]

நாங்கள் கட்டியது வீடு அல்ல
எத்தனை முறை விழுந்தாலும்
மீண்டும் எழும்
பீனிக்ஸ் பறவை கட்டிய கூடு.

பல முறை விழுந்தேன், பல முறை எழுந்தேன்
எத்தனை முறை விழுந்தேனோ அத்தனை முறையும் எழுந்தேன்
விழுவதெல்லாம் எழுவதற்குத்தான் என்ற
பொதிகை கவிஞன் சொன்ன கவிதைக்கிணங்க
நாங்கள் கட்டியது வீடு அல்ல
பீனிக்ஸ் பறவையின் அழகான கூடு.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்