6

 

“இரசமணியா…”

“ஆமாம்மா”

“அப்டின்னா என்ன மாமா?”

“அது சொன்னா ஒனக்கு புரியாதுமா”

“எனக்கு புரியறமாரி சொல்லுங்க”

“உனக்கு புரியுமான்னு தெரியல சொல்றேன் கேளுமா. இரசமணி செய்ய முக்கியதேவை பாதரசம் அப்டிங்கர ஒரு திரவம் நீ இத பாடத்துல படிச்சிருப்ப. அறிவியல் பூர்வமா பாத்தா அது ஒரு திரவம்னு சொல்வீங்க. ஆனா, ஆன்மீக பூர்வமா சொல்றது என்னன்னா பாதரசங்கறது ஆதி சிவனோட விந்து என்று சித்தர்கள் சொல்றாங்க. அந்த பாதரசம் எந்த பொருளோடயும் ஒட்டாது. அந்த சித்தர்கள் மாதிரியே. ஆனா இதுல தங்கம் தப்பித்தவறி பட்டாக்கூட அந்த தங்கம் பஷ்பமா போய்டும். அவ்ளோதான் தங்கம் இருந்த இடமே தெரியாம போய்டும். அப்படிப்பட்ட ஒரு அதிசயத்தை சில மூலிகை சாறு சேர்த்தே சித்தர்கள் செய்த மணிதான் இது.”

“சரி மாமா இதவச்சிகிட்டு என்ன பன்றது?”

“நீ ஒன்னும் பண்ண வேணாம்மா! அது எல்லாம் ஒனக்கு பண்ணும். ஆனா ஒன்னுமா, பெண்களிடம் இது இருக்கும் போது சில கட்டுப்பாடுகள் வேணும். அத மட்டும் கடைபிடிச்சிக்க போதும்.”

“என்ன மாமா கட்டுப்பாடு”

“வீட்டுக்கு விழக்கு ஆகும் போது மட்டும் நீ இதை தொடக்கூடாது. இது பக்கத்துலயும் போக்கூடாது.”

“சரி மாமா.”

“அந்தமாரி நேரத்துல நீ ஜாக்கிரதையா இருக்கணும். அந்த மணி ஒங்கிட்ட இல்லாத நேரத்துல சில விபரீதங்களும் நடக்கலாம் பாத்துக்க.”

“நான் பாத்துக்கறேன் மாமா.”

இவர்கள் பேசுவதையும், இரசமணி என்று ஏதோ சொன்னதையும், ராஜாவும் ராஜேசும் சற்று தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“டேய் மச்சி எப்படியாச்சும் நாம அந்த சரணை போடனும்டா. எனக்கு காசு பணம்லாம் பெரிசே இல்லடா. என் கலைவாணியே என்னை மதிக்காம போய்ட்டாடா. இவனை மட்டும் போட்டம்னா அப்புறம் எனக்கு இடஞ்சலே இல்லடா மச்சி.”

“அதுக்கு அவசியமே இல்லை…”

அவர்கள் பின்னால்தான் இந்த குரல். திரும்பிப்பார்த்தான். சீனிவாச செட்டியார் நின்றிருந்தார்

“மாமா…”

“ச்சீய் அப்படி கூப்பிடாதடா மானங்கெட்டவனே. இவ்வளவு நாளும் தெல்லவாரி பொறுக்கியாத்தான் திரிஞ்ச. இன்னைக்கு கொலை பண்ற அளவுக்கு போய்ட்டியாடா?”

“மாமா… அது இல்ல மாமா…”

“எது இல்ல டேய் ஒன்ன பெத்ததும் ஒன்னோட அம்மா செத்துப்போய்ட்டா. அவ சாகறதுக்கு முன்னாடி ஒன்ன என் கைல குடுத்து இவனை நீதாண்ணா பாத்துக்கனும்னு சொல்லிட்டு அவ போய்ட்டா. ஒன்ன நான் வேறையா பாக்காலையேடா. என் பசங்களுக்கு என்ன பண்றனோ அதேதான்டா ஒனக்கும் பண்ணேன். அப்புறம் ஏன்டா நீ இப்படி கொல்ல கொலைன்னு திரியற?”

“எனக்கு கலைவாணிய கல்யாணம் பண்ணித்தாங்க. நான் ஒழுங்கா இருக்கேன்.”

“செருப்பு பிஞ்சிறும் நாயே. யாருக்கு யாருடா ஜோடி?”

“ஒம்மவளுக்கு நான்தான் புருஷன். இத யாராலயும் மாத்த முடியாது.”

“போடா போக்கத்தவனே. எம்மவளுக்கு ஜோடி ரெடியா இருக்கான்டா எம்பையன் கல்யாணம் முடிஞ்ச கையோட எம்பொண்ண நான் அவனுக்கு கட்டி கொடுக்கப்போறேன்டா.”

“அது நடக்காது.”

“அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது. இப்போ பாரதிய சடங்குக்காக பொண்ணு பாக்க போறேன். பாத்துட்டு அப்படியே எம்பொண்ணு கல்யாணத்தையும் பேசி முடிச்சிட்டுத்தான் வரப்போறேன். நான் திரும்பி வரதுக்குள்ள எங்கயாவது போய்டு. என் கண்ணு முன்னாடி நிக்காத!” சொல்லிவிட்டு வெடுக்கென கிழம்பி விட்டார்.

“டேய் மச்சி… மொதல்ல இந்த கெழவனப் போடனும்டா.”

“அதுக்கு அவசியம் இல்லை.” மீண்டும் பின்னால் ஒரு குரல் திரும்பிப்பார்த்தான். இந்த முறை அவன் பின்னால் நின்றிருந்தார் கோவணச்சாமியாய் உருமாரி இருக்கும் வெங்கடாஜலம்.

அவனும் கோவணச்சாமியை பார்த்திருப்பதால் வணக்கம் வைத்து வரவேற்றான்.

“நினைத்த வாழ்க்கை அமையட்டும்.”

“கிழிஞ்சது. என் வாழ்க்கைய இன்னொருவன் கைல புடிச்சிக்கொடுக்கத்தான் சாமி எம் மாமன்காரன் போய்ட்டு இருக்கான்.”

“கவலை படாத போனவன் போனவன்தான். திரும்ப வரமாட்டான்.”

“என்ன சாமி சொல்றீங்க? ஒன்னும் புரியலை!”

“இன்னும் பத்து நிமிஷத்துல ஒன் மாமான்காரன் சாகப்போறான்.” இவர் சொல்லி முடிக்கவும் பெரிதாய் ஒரு இடி இடித்தது. அது நேராக வெங்கடாஜம் செட்டியார் செல்லும் காரில் விழப்போகிறேன் என்பது போல வீர் என காரை நோக்கி வந்தது.

தொடரும் …

பகுதி 5


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »