குந்தைகளைத் தண்டிக்கும்போது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை..
—————————————————————–
* குழந்தை தவறைத் திருத்திக் கொள்வதற்காக வேண்டி மட்டும் தண்டிக்க வேண்டும்….பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

* தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்…. மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

* தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்…. உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

* தண்டித்த உடனே “ஐயோ பாவம்” என்று பாசத்தைக் காட்டி விடக் கூடாது,….குழந்தை தன் தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்ட வேண்டும்.

*தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்…அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

*குழந்தையைத் தண்டிக்கும் முன்,
செய்த தவறு பற்றியும், நாம் தரப்போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லிக்காட்டி தவறை உணர்த்த வேண்டும்….

*திட்டித் தீர்த்து மனதில் ரணங்களை உருவாக்கிவிடக் கூடாது..

*எனவே புரிந்து கொள்வோம்….
குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.

*தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள்தான் உருவாகும்.

*தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிட உள ரீதியான அணுகு முறையே சிறந்தது.


1 Comment

கே.தேன்மொழி தேவி · நவம்பர் 13, 2016 at 10 h 43 min

ஆம். தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிட உள ரீதியான அணுகு முறையே சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கட்டுரை

காதல்

பூவைவிட காமம் மெல்லியது.
அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு!

காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன.

 » Read more about: காதல்  »

கட்டுரை

ஒரு பரபரப்பு செய்தி…

செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.

 » Read more about: ஒரு பரபரப்பு செய்தி…  »