உலகம் எங்கும் படர்ந்த கூட்டம்
தமிழர் கூட்டம் – என்றும்
ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும்
புனிதக் கூட்டம்!
அண்டை, மேலை நாடு தோறும்
உழைக்கும் கூட்டம்! – என்றும்
அன்பு, நேர்மை, வாய்மை போற்றி
அணைக்கும் கூட்டம்!
பண்டை அறநூல் நிறைவாய்த் தந்த
மொழியின் கூட்டம்! – என்றும்
பசுமை யான இலக்கியங்கள்
வழங்கும் கூட்டம்!