கண்ணாடி Mirror

மூலம்: சில்வியா பிளாத்
மொழியாக்கம்: தாரா கணேசன்

நான் வெள்ளியின் துல்லியமானவள்
எவ்வித முன்புனைவுகளும் அற்றவள்
காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள்
காதலின் மூடுபனியோ அன்றி
வெறுப்போ இன்றி
கொடூரம் அற்றவளாய்,
உண்மையானவளாய் மட்டும் இருக்கிறேன்
அந்தச் சிறிய கடவுளின் கண்ணென
நான்கு மூலைகளையும் அளந்தபடி
பல நேரங்களில் நான்
எதிர் சுவற்றை தியானிக்கிறேன்
அது இளஞ்சிவப்பாய்
புள்ளிகள் நிறைந்திருக்கிறது
வெகுநேரம் நான் அதனை
நோக்கியபடியே இருந்திருக்கிறேன்
அது என்னிதயத்தின்
ஒருபகுதியெனவே கருதுகிறேன்
ஆயினும் அது துடித்தபடியிருக்கிறது
முகங்களும் இருண்மைகளும்
நம்மை மறுபடி மறுபடி பிரிக்கின்றன
இப்போது நானோர் ஏரி.
ஒரு பெண் எனை நோக்கிக் குனிகிறாள்
தன்னை அறிந்துகொள்ள
எனதாழங்களைத் தேடுகிறாள்
பிறகவள் அந்தப் பொய்யர்களையோ,
மெழுவர்த்தியையோ அல்லது
நிலவையோ நோக்கித் திரும்புகிறாள்
நான் அவளது பின்புறத்தை நோக்குகிறேன்
அது மிக உண்மையாகப் பிரதிபலிக்கிறது
தனது கண்ணீரையும்
கரங்களின் குழப்பத்தையும்
எனக்குப் பரிசாய் அளிக்கிறாள்,
அவள் போவதும் வருவதுமாய் இருக்கிறாள்.
எல்லாக் காலைகளிலும்
அவளது முகமே இருளை விலக்குகிறது
என்னில் அவளோர் யுவதியாய் மூழ்கி,
முதியவளாய் என்னிலிருந்து உதித்தெழுந்து
அவளது ஒவ்வோர் நாளையும் அடைகிறாள்,
திகிலுண்டாக்கும் ஓர் மீனென


1 Comment

கவிஞர் விட்டு கு. நா. கவின்முருகு · அக்டோபர் 25, 2016 at 23 h 45 min

.
” ….
அவளொரு யுவதியாய் மூழ்கி, முதியவளாய் உதித்தெழுந்து அவளது ஒவ்வொரு நாளையும் அடைகிறாள். ”

ஆகா எத்தனை பெரிய வாழ்வியல் இது. ஒவ்வொரு நாளும் முதுமையை நோக்கியே பொழுதுகள் புலர்கின்றது. இளமை மாறி முதுமை அடைவதை மிக இலகுவான வாழ்வியல் உண்ணதத்தை எழுதி தீர்த்துவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள். நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்